இன்றைய இளம் தலைமுறையினருக்கு உள்ள மிக பெரிய பிரச்சனை என்று சொல்ல போனால், அது சரும பிரச்னை, கூந்தல் பிரச்சனை என்று சொல்லலாம். இந்த பிரச்சனைகள் வருவதற்கு, ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம்.
தற்போது நாம் இந்த பதில், பெண்கள் எவ்வாறு கூந்தலுக்கு எண்ணெய் பூச வேண்டும் பார்ப்போம்.
பெண்களுக்கு உள்ள கூந்தல் வகைகளில் இரண்டு வகைகள் உள்ளது. எண்ணெய் பசை கூந்தல், மற்றோன்று வறட்சியான கூந்தல். இப்படிப்பட்ட எந்த வகையான கூந்தலை உடையவராக இருந்தாலும், நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, தலைக்கு எண்ணெய் தடவி விட்டு செல்லக் கூடாது.
அப்படி எண்ணெய் தேய்த்து விட்டு சென்றால், நம்மை சுற்றி உள்ள சூழலில் உள்ள தூசு, அழுக்கு உடல் வெப்பத்தினால் சுரக்கும் எண்ணெய் அனைத்தும் சேர்த்து நமது தலையில் பொடுகை உருவாக்கி விடும். எனவே வெளியில் செல்லும் போது, தலைக்கு எண்ணெய் தடவைக்கு கூடாது.
நாம் கூந்தலில் எண்ணெய் தடவினால், எண்ணெய் தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின்பு தலையை அலசி குளித்து விட வேண்டும். இரவு எண்ணெய் வைத்துவிட்டு, மறுநாள் காலையில் குளிக்கலாம் என்று எண்ணி இருப்பது தவறு.
நாம் வெளியில் செல்லும் போது, கூந்தலில் எண்ணெயை தடவி விட்டு சென்றால், நாம் வெயிலில் செல்லும் போது, அது சூரிய வெப்பத்தை நேரடியாக ஈர்த்துக் கொள்ளும். அவ்வாறு ஈர்த்து எடுக்கப்படும், வெப்பம் சருமம் மற்றும் கூந்தலை அது பாதிக்கக் கூடும்.
தினமும் நமது கூந்தலில் எண்ணெயை தடவி 20 நிமிடங்கள் ஊறிய பின்பு குளித்து வந்தால், அது நமது கூந்தலில் உள்ள தூசு மற்றும் அழுக்குகளை நீக்கிவிடும்.
ஆனால், சைனஸ், தலைவலி, சளி தொந்தரவு உள்ளவர்கள், தினந்தோறும் இவ்வாறு செய்யாமல், வாரத்துக்கு இருமுறை 20 நிமிடங்கள் வரை எண்ணெய் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
நமது கூந்தலை இவ்வாறு பராமரித்து வந்தால், அது நமது முடியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, சரும பிரச்சனைகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது. எனவே, எப்போது, எப்படி கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்பதை அறிந்து செயல்பட்டால், கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமானதாகவும், அழகாகவும் இருக்கும்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…