அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாத சில முக்கிய உறுப்புகள் என்னென்ன தெரியுமா?
மக்களில் பலர் பற்பல மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர்; அந்த மூடநம்பிக்கைகளில் முக்கியமானவை உடல் பாகங்கள் சுத்தம் தொடர்பான்வை தான். அதிக முறை பல் தேய்த்தால் பற்கள் வெள்ளையாகிவிடும் என்பது போன்ற முட்டாள் தனமான விஷயங்களை பலர் பின்பற்றி வருகின்றனர்.
இந்த பதிப்பில் உடல் சுத்தம் தொடர்பாக, மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள் தனமான பழக்க வழக்கங்களின் உண்மை நிலை குறித்து காணலாம்.
தலைக்கு குளித்தல்
அடிக்கடி அல்லது தினந்தோறும் தலைக்கு குளிப்பதால் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்து விடலாம் அல்லது தலைமுடி அடர்த்தியாகும் அல்லது தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும் என்று நினைத்து – நம்பி இப்பழக்கத்தை வழக்கமாக கொண்டவர்களே!
அடிக்கடி தலைக்கு குளிப்பது முடி வளர்ச்சியை பாதிக்கும்; முடியின் வேர்க்கால்களில் இருக்கும் ஈரப்பதத்தை போக்கி விடும். இந்த பழக்கம் மிகவும் ஆபத்தானது என்ற உண்மையை உணருங்கள்!
பிறப்புறுப்பு
பிறப்புறுப்பை அடிக்கடி கழுவினால் அது சுத்தமாக இருக்கும் என்று எண்ணி, அதனை சுத்தம் செய்து கொண்டே இருத்தல் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம். பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் அவசியம் ஏற்படும் தருணங்களன்றி மற்ற நேரங்களில் கழுவுதலை தவிர்க்க வேண்டும்.
துளை கொண்ட உறுப்புகள்
மனித உடலில் துளை கொண்டு திகழும் உறுப்புகளான மூக்கு, காது, தொப்புள் போன்றவற்றை அடிக்கடி கழுவி சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த உறுப்புகளில் காணப்படும் மெழுகு போன்றவை அந்த உறுப்புகளை தூசி, மாசு போன்றவற்றில் இருந்து காத்து, மாசுக்கள் உடலின் உள்ளுறுப்புகளை அடைந்து விடாமல் தடுக்கவும் உதவுகின்றன.
ஆகையால், இந்த துளை கொண்ட உறுப்புகளை அடிக்கடி சுத்தம் செய்யாமல், அவசியம் ஏற்படும் பொழுது மட்டும் சுத்தம் செய்யவும்.
அடிக்கடி குளித்தல் – தேய்த்தல்
ஒரு நாளைக்கு இரு முறை பல் விலக்கி, குளித்தால் போதும்; தோன்றும் போதெல்லம் குளிப்பது, பல் துலக்குவது என அடிக்கடி இச்செயல்களை செய்வது பல் தேய்மானம் மற்றும் உடலின் ஈரப்பத பற்றாக்குறை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவ்விஷயங்களை நினைவில் கொண்டு, இந்த செயல்களை உங்கள் அன்றாட வாழ்க்கையில் இருந்து தவிர்த்திடுங்கள்!