இந்த 5 கொள்கைகளை கடைபிடித்தால் உங்களின் ஆயுள் அதிகரிக்கும்…

Default Image

நீண்ட காலம் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தான். ஆனால், இதை நிறைவேற்ற நாம் எதையுமே செய்வதில்லை என்பதே உண்மை.

தினசரி ஒரு சில செயல்களை கடைபிடித்து வந்தால் நம் ஆயுள் தானாகவே கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதிக ஆயுளை தர கூடிய அந்த பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இங்கு அறிந்து பயன் பெறுவோம்.

சாப்பாடு
எப்போதுமே சாப்பிட்டு கொண்டே இருக்கும் பழக்கம் மிக மோசமான பாதிப்பை நமக்கு ஏற்படுத்தும். எந்த அளவுக்கு சாப்பிடுகிறோமோ அந்த அளவிற்கு நாம் உடற்பயிற்சி போன்றவற்றை கடை பிடித்தால் நல்லது. இல்லையேல் ஆயுள் குறைந்து விடும்.

தாம்பத்தியம்
வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தாம்பத்திய உறவில் ஈடுபடுவது ஆயுளை நீடிக்கும் என அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது. இது மேலும் இருவருக்குள்ளும் இருக்க கூடிய நெருக்கத்தை அதிகரிக்கும் தன்மை வாய்ந்ததாம்.

மிதமான ஒளி
அன்றாடம் மிதமான சூரிய ஒளியில் 15 நிமிடமாவது இருங்கள். இது உங்களை எப்போதுமே இளமையாக வைக்கும் ஒரு எளிய வழியாகும். இதற்கு காரணம் சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி தான்.

உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடமாவது நடைப்பயிற்சியை செய்யும் பழக்கத்தை வைத்து கொள்ளுங்கள். அல்லது ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை செய்து வாருங்கள். இது உங்களுக்கு அதிக ஆரோக்கியத்தை தர கூடும். இதய நோய்கள், உடல் பருமன் போன்றவற்றில் இருந்து உங்களை காக்கும்.

சத்தான உணவு
பச்சை காய்கறிகள், பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டாலே உங்களின் ஆயுள் எளிதாக நீடிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலும், தினமும் பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்ற ஏதேனும் ஒரு பருப்பு வகையை சாப்பிட்டு வந்தால் சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.

தீய பழக்கங்கள்
இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் புகை மற்றும் மது பழக்கம் அதிக அளவில் உள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக உங்களது ஆயுளை உறிஞ்சி எடுக்க கூடியவை. ஆதலால் இதனை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்