பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
அன்றாடம் நாம் உண்ணும் உணவு வகைகளால் தான் நமக்கு பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனேவ நாம் உண்ணும் உணவுகளில் நாம் கவனம் செலுத்தினால் மட்டும் போதும் நம்மை எந்த விதமான நோய்களும் தாக்க வாய்ப்பில்லை. இன்றைய நவீன காலத்தில் நாம் நாகரிகம் என்று நினைத்து அதிகஅளவில் பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிட்டு பலவகையான நோய் தாக்குதலுக்கு ஆளாகிறோம்.
இந்த பாஸ்ட்புட் உணவுகள் நமது உடல் பருமனை அதிகரிப்பதோடு உடலில் பல வகையான நோய்களையும் நமக்கு தந்து விடுகிறது.இந்தவகையான உணவுகளை நாம் உணவில் சேர்ப்பதை தவிர்த்து விட்டு காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
நாம் அன்றாடம் 50 கிராம் அல்லியம் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய நலன்களைப் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.
இந்த பதிப்பில் நாம் எந்தவகையான வழிமுறைகளை பின்பற்றினால் பெருங்குடல் புற்று நோய் மற்றும் பல வகையான நோய் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் என்பதனை இருந்து படித்தறியலாம்.
பூண்டு :
பூண்டில் பல வகையான சல்பர் கலவைகளை கொண்டுள்ளதால் இது நமது உடலுக்கு பல வகையான ஆற்றல்களை கொடுக்கிறது.
பூண்டில் அல்லில் சல்பைடு எனப்படும் ஆற்றல் மிக்க பொருள் இருப்பதால் புற்றுநோய் தடுக்கும் . பூண்டில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்களை கொண்டுள்ளது. இது நம்மை புற்றுநோய் பதிப்பில் இருந்து காப்பதோடு மட்டுமல்லாமல் பல வகையான நோய் பதிப்பில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
வெங்காயம் :
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் என பல சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. இது நம் உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்து தருகிறது. இது நமக்கு பெருங்குடல் புற்றுநோய் வராமல்த டுக்கிறது.
தற்போதைய ஆய்வின் படி ஒவ்வொரு ஆண்டும் 16 கிலோ அல்லியம் காய்கறிகளை உணவில் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய்களை குணப்படுத்த வல்லது மற்றும் குடல்புற்று நோய் ஏற்படும் அபாயம் நம்மை நெருங்காது.
லீக்ஸ் :
லீக்ஸ் நமது உடலுக்கு தேவையான நீர்சத்து மற்றும் பல வகையான ஊட்ட சத்துக்களை கொண்டுள்ளது. இதனை நாம் உணவில் எடுத்து கொள்ளும் போது பல வகையான நோய்களை கட்டுபடுத்தும் ஆற்றல் மிக்கது. இதுவும் குடலில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்க வல்லது.
ஆசிய பசிபிக் ஜர்னல் சமீபத்தில் ஒரு ஆய்வினை நடத்தியது. அதில் தினமும் தங்களுடைய உணவில் 50 கிராம் அல்லியம் காய்கறிகளை எடுத்து கொண்டு வந்த இளம் தலைமுறையினருக்கு பெருங்குடல் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் 79 சதவீதம் குறைவாக உள்ளதாக அறிவித்துள்ளது.
வாழ்க்கைமுறை :
இன்றைய இளம் தலைமுறையினர் வேலைப்பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பதாலும் மற்றும் அதிக அளவில் பாஸ்ட்புட் உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வருவதாலும் குடல் புற்று நோய் வர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் கூறப்படுகிறது.மேலும் அன்றாடம் நாம் உடற்பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சிகளை செய்யாமல் இருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது.மேலும் புகைபிடித்தல் பழக்கம் உள்ளவர்களுக்கும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.