இதய நோய்களை தடுக்க வாரத்திற்கு 2 முறையாவது இந்த 6 உணவுகளை சாப்பிட்டு வாங்க..!
ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் இதயம் என்பது மிக முக்கியமான உறுப்பாக்கும். இதயம் ஆரோக்கியமாக இருந்தால் எந்த செயலையும் செய்ய இயலும். மற்ற உறுப்புகளை விட இதயம் அதி முக்கியமான உறுப்பு.
இதனை என்றுமே ஆரோக்கியமாக வைத்து கொள்ள, ஒரு சில உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் போதும் என மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர். அவை என்னென்ன உணவு என்பதை இனி அறிந்து கொண்டு, பயன் பெறுவோம்.
கிரீன் டீ
அதிக ஆரோக்கியமாக இருக்க தினசரி கிரீன் டீயை குடித்தாலே நல்லது. கிரீன் டீயை அன்றாடம் குடித்து வருவதன் மூலம் இதய நோய்களில் இருந்து 20 சதவீதம் தப்பித்து கொள்ளலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றின் இந்த தன்மைக்கு இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் தான்.
பருப்பு வகைகள்
பாதாம், வால்நட்ஸ் போன்ற பருப்பு வகைகள் நமக்கு அதிக ஆரோக்கியம் தர கூடியவை. அன்றாடம் சிறிதளவு பாதாம் அல்ல்து வால்நட்ஸை சாப்பிட்டால் இதயம் பலமாகும்.இதனுடன் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலையும் அதிகரிக்கும்.
மீன்
உணவில் வாரத்திற்கு 2 முறை மீன் சேர்த்து சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் கூடும். ஏனெனில், மீனில் இதய நோய்களை தடுக்க கூடிய ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன. ஆகவே மீன் இதயத்திற்கு பாதுகாப்பு அரண் போன்று இருக்கும்.
கிட்னி பீன்ஸ்
சிறுநீரக வடிவில் இருக்க கூடிய இந்த வகை கிட்னி பீன்ஸ்கள் அதிக பயன்களை நமது உடலுக்கு தரும். இவற்றில் நார்சத்து, வைட்டமின் பி, தாதுக்கள், போன்றவை அதிகம் உள்ளனவாம். வாரத்திற்கு ஒரு முறையாவது இதனை சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
மாதுளை
பொலிபீனால்ஸ் மற்றும் அந்தோ சைனின் என்கிற இரு முக்கிய மூல பொருட்கள் மாதுளையில் உள்ளதால் இதய நோய்கள் வராமல் காக்கும். மேலும், இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டத்தையும் இது தரும்.
தக்காளி
நம்மில் பலர் தக்காளியை ஒதுக்கி வைத்தே உணவை உண்ணுவோம். இந்த பழக்கம் பல வகையிலும் நமக்கு ஆபத்தை தரும். தக்காளியை ஒதுக்காமல் சாப்பிட்டால் இதய ஆரோக்கியம், புற்றுநோய் அபாயம், சுருக்கங்கள் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.