இந்திய உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு பொருள் பூண்டு. பல மருத்துவ குணங்களை இது தனக்குள் ஒளித்து வைத்துள்ளது. உடலில் உண்டாக கூடிய பல்வேறு நோய்களுக்கு இது தீர்வாக உள்ளது. இப்படிப்பட்ட பூண்டு தான் உங்களின் தூக்கத்திலும் உதவ போகிறது.
ஹோர்மோன் பிரச்சினை முதல் தூக்கமின்மை வரை ஒரு பல் பூண்டினால் குணப்படுத்தி விட இயலும். இந்த பதிவில் தூங்கும் முன் ஏன் பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும் என்பதற்கான உண்மை காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
கால மாற்றம்
இன்றைய கால கட்டத்தில் எல்லோருடனும் அதிகம் நெருக்கமாக இருக்கும் ஒரே பொருள் உங்கள் மொபைல் தான். ஸ்மார்ட் உலகில் எல்லாவித சாதனங்களும் மிகவும் ஸ்மார்ட்டாகவே உள்ளது. இது அறிவியலின் வளர்ச்சியாக இருந்தாலும், இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு நிம்மதியான தூக்கம் கூட இதனால் கிடைப்பதில்லை.
தூக்கம்
மனிதன் உழைத்து களைத்த பின் அவசியம் வேண்டியது ஓய்வு தான். ஆனால், இன்றைய தலைமுறையினருக்கு இது மிகவும் அரிதான ஒன்றாகவே மாறி விட்டது. பலர் ஸ்மார்ட் போன்களில் தங்களது தூக்கத்தை தொலைத்து விட்டு கதறுகிறார்கள். தூக்கம் இல்லையென்றால் ஹார்மோன் பாதிப்பு ஏற்பட்டு உடல் மற்றும் மன ரீதியாக பல நோய்கள் உங்களை வந்து சேரும்.
ஏன் பூண்டு?
இந்த தூக்க பிரச்சினையை சரி செய்ய எளிமையான வழி பூண்டு தான். தூங்க போகும் முன் ஒரு பல் பூண்டை தலையணைக்கு அடியில் வைத்து விட்டு தூங்குங்கள். இதுவே உங்களின் தூக்கமின்மை பிரச்சினையை குணப்படுத்தி விடும்.
காரணம்?
தலையணைக்கு அடியில் பூண்டை வைக்கும் போது, இதில் உள்ள அல்லிசின் என்கிற மூல பொருள் மூளைக்கு ஒரு வித நறுமணத்தை தந்து செயல்திறனை அதிகரிக்க செய்யும். மூளையும் இதனால் ஆழ்ந்த தூக்கத்தை தரும். இனி, “தூக்கம் வரவில்லையே”என்கிற கவலையை துரத்த, இந்த ஒரு டிப்ஸ் போதும்!
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…