படுக்கைக்கு அருகில், எலுமிச்சையை வைத்துக்கொண்டு உறங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Default Image

தினமும் இரவு உறங்குகையில் நாம் அமைதியாக கண்ணுயர்ந்து ஓய்வு எடுக்கையில், நம் உடலின் உள்ளுறுப்புகள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கின்றன; நமது உடலின் அன்றைய நாள் கழிவுகளை நீக்கி, அடுத்த நாளுக்காக நம்மை தயார் செய்ய, உடல் உள்ளுறுப்புகள் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கின்றன. அப்படி இரவிலும் உழைக்கும் உள்ளுறுப்புகளுக்கு நாம் ஒவ்வொருவரும் உதவ வேண்டுமல்லவா! அது எப்படி என விளக்கவே இப்பதிப்பு.

என்ன உதவி?

நாள்தோறும் பல மாசுக்கள், புழுதிகள், கிருமிகள் நம்மை தாக்கும் வண்ணம் பலவித செயல்களை புரிகிறோம்; உதாரணத்திற்கு சாலை நெரிசல் மிகுந்த இடத்தில் பயணிக்கும் பொழுது நம் சுவாச உறுப்புகள் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகின்றன.

இவ்வாறு பாதிப்பிற்குள்ளாகும் உள்ளுறுப்புகளை தூய்மைப்படுத்தி, ஆரோக்கியமாக திகழ செய்ய வேண்டியது நமது கடமை ஆகும்; இந்த பதிப்பில் படுக்கைக்கு அருகில், நறுக்கப்பட்ட எலுமிச்சையை வைத்துக்கொண்டு உறங்குவதால், உள்ளுறுப்புகளுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

பூச்சிகள் அண்டாது..

நாம் படுத்து உறங்கும் அறையில் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்றவற்றை அண்டவிடாமல் தடுத்து, நம்மை காக்க எலுமிச்சை துண்டு உதவும்; எலுமிச்சையில் இருந்து வரும் மணமும், அதன் அமில சுவையும் பூச்சிகளை தூரத்தில் வைக்க உதவும்.

இரத்த அழுத்தம்

உடலின் இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கவும், இரத்தம் இயங்கி வரும் முக்கிய இடமான இதயத்தை தூய்மையாக வைக்கவும் எலுமிச்சையின் மணம் மற்றும் அதன் வாசனை வீரியம் உதவுவதாக இலண்டன் அறிவியல் ஆராய்ச்சி மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் உடலில் ஏற்பட்டுள்ள வலிகள் உங்கள் உறக்கத்தை கெடுக்காத வண்ணம், எலுமிச்சை வலி நிவாரணியாகவும் செயல்படும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் மற்றும் கவலை போன்ற உணர்வில் இருந்து உங்கள் மனதை விடுபட செய்து, நிம்மதியான உறக்கத்தை அளிக்க எலுமிச்சை பேருதவி புரியும்.

காற்றின் தரம்

உங்கள் படுக்கையறையில் நிலவும் காற்றின் தரத்தை மேம்படுத்தி, தூய்மையான, கார்பன் டை ஆக்ஸைடு குறைந்த – ஆக்சிஜன் நிறைந்த காற்றை உங்கள் சுவாச மண்டலம் பெற, எலுமிச்சை பெரிதும் உதவும்.

சுவாச அமைப்பு

மனிதர்களின் சுவாச அமைப்பில் நிலவும் கோளாறுகளை மற்றும் மூக்கு, மூச்சுப்பாதையில் காணப்படும் அடைப்புகளை சரிசெய்து உடலை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய எலுமிச்சை உதவும்.

ஆஸ்துமா மற்றும் சைனஸ் குறைபாடு கொண்டவர்கள், இவ்வாறு எலுமிச்சையை படுக்கைக்கு அருகில் வைத்துக்கொண்டு உறங்குவதால் அவர்கள், அந்நோய்களிலிருந்து எளிதில் விடுபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்