இந்திய பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்கள் – பாகம் 2

Default Image

நம் நாட்டில் பெண்களுக்கு எதிராக பல அநியாயங்கள் நிகழ் காரணம் பெண்களுக்கு சரியான கல்வியறிவு அளிக்கப்படாதாதே ஆகும்; பல கற்றறிந்த பெண்கள் கூட தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் பற்றி அறியாமல் இருக்கின்றனர். இது போல் பெண்கள் தங்களுக்கான அடிப்படை உரிமைகளை பற்றி அறிந்து கொள்ளாத வரையில் அவர்களுக்கு எதிராக நடைபெறும் அநியாயங்களும் கூட தடுத்து நிறுத்தப்பட சாத்தியமே இல்லை.

இந்த பதிப்பில் இந்திய பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை சட்ட திட்டங்கள் பற்றி படித்து அறியலாம்.

வன்முறைக்கு எதிரான உரிமை

பெண்களை யாரேனும் பாலியல் அல்லது உடலியல் அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால், வரதட்சணை கொடுமை போன்ற விஷயங்களுக்காக பெண்கள் துன்புறுத்தப்பட்டால், பெண்கள் தைரியமாக துன்புறுத்தும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கலாம்.

தனிப்பட்ட உரிமை

பெண்கள் தங்களது தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு, முறைகேடு செய்யும் நபர்களின் மீது கண்டிப்பாக புகார் அளிக்கலாம்; தங்களை தவறாக படம் பிடித்து மிரட்டுபவர்கள் போன்ற நபர்களின் மீது நிச்சயம் FIR ஃபைல் செய்யலாம்.

மகப்பேறு உரிமை

பணிபுரியும் இடத்தில் மகேப்பேறு காலத்தில் 26 வாரங்களுக்கு சம்பளத்துடனான விடுமுறையை பெற்றுக்கொள்ளலாம்; இந்த உரிமையை தர மறுக்கும் நிறுவனத்தின் மீது பெண்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்.

பணி – ஊதிய உரிமை

செய்யும் வேலைக்கு ஏற்ற சரியான ஊதியம் பெறும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது; பெண்கள் தாங்கள் செய்யும் பணிக்கு சரியான ஊதியம் அளிக்கப்படவில்லை எனில் கண்டிப்பாக இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம்.

தத்தெடுத்துக் கொள்ளும் உரிமை

பெண்கள் தங்களுக்கு விருப்பமான குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் உரிமை கொண்டவர்கள்; ஏதேனும் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள விரும்பினால், முறைப்படி விண்ணப்பித்து குழந்தையை தத்தெடுத்துக்கொள்ளலாம்.

இலவச சட்ட உதவி

பெண்கள் போதிய அளவு வருமானம் இல்லாதவராக இருந்து, ஏதேனும் வழக்கை மேற்கொள்ள விரும்பினால், அதற்கு இலவச சட்ட உதவி அளிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான விஷயங்கள்

பெண்களுக்கு எதிரான விஷயங்களான தேவதாசி முறை, சதி முறை, வரதட்சணை கொடுமை போன்றவை தொடர்பாக, பெண்களை யாரேனும் துன்புறுத்தினால் அவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்க பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்