அதிகாலையில் சீக்கிரமாக எழுபவரா நீங்கள்? அப்ப கண்டிப்பா இதை படிங்க!
நமது வாழ்வில் பல துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களை நாம் காண்கிறோம். அவர்களின் சாதனைக்கு மிக முக்கியமான ஒரு காரணியாக இருப்பது. காலையில் சீக்கிரமாக விழித்துக்கொள்ளும் பழக்கம் தான்.
இந்த பழக்கம் தான் சாதனையாளர்களை மிகப் பெரிய அளவில் வெற்றி பெற செய்கிறது. தற்போது இந்த பதிவில் நாம் அதிகாலையில் சீக்கிரமாக எழுவதால் நமக்கு என்ன பயன்கள் கிடைக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறியுள்ளது. உடற்பயிற்சி செய்வதால், நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, பல நோய்களில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. உடற்பயிற்சி செய்வதற்கு அதிகாலையில், எழுவது மிகவும் முக்கியமான ஒன்று.
மூளை
நாம் அதிகாலையில் எழும் பழக்கத்தை கொண்டிருந்தால், நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இவ்வாறு சுறுசுறுப்பாக இருப்பதால், நாம் எந்த வேலையையும் குழப்பம் இல்லாமல், தெளிவான மனநிலையுடன் செய்ய முடிகிறது.
நரம்பு இயக்கம்
நாம் அதிகாலையில், நேரத்திற்கு எழுவதை வழக்கமாக கொண்டிருந்தால், நமது உடலில் நரம்பின் இயக்கங்கள் சீராக இயங்க உதவுகிறது. இதனால், நாம் உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடன் வேலை செய்யலாம்.
மனஅழுத்தம்
அதிகாலையில் எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படாது. மனஅழுத்தம் இருந்தால் நம்மால் முறையாக வேலை செய்ய இயலாது. எனவே அதிகாலையில் நாம் சீக்கிரமாக எழும் போது, எந்த வேலை எப்போது, எப்படி செய்யலாம் என திட்டமிட்டு செய்ய உதவுகிறது.
தூய்மையான காற்று
அதிகாலையில் சீக்கிரமாக எழுபவர்களால், தூய்மையான காற்றை சுவாசிக்க இயலும், தூய்மையான காற்றை சுவாசிப்பதால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாமல், நமது உடல் ஆரோக்யத்தை பாதுகாக்கலாம். அதிகாலையில் எழுந்து, மூச்சு பயிற்சி மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை செய்வது உடலுக்கு மிகவும் நல்லது.