டயட் இல்லாமல் உடல் எடையை குறைப்பதற்கான 5 வழிகள்…!!!

Default Image

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இதனை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளை கையாண்டாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. மாறாக பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. இதற்காக பல வழிகள் இருந்தாலும் அதனை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும்.

தினமும் காலை உணவை உண்ண வேண்டும் :

காலை உணவை தவிர்த்தால் கலோரிகளை எரிக்கலாம் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு தவிர்க்கும் பொது ஏற்படும் பசியானது, மற்ற வேளைகளில் அதிகமாக உண்ணத் தூண்டும். காலை உணவை தவிர்ப்பவர்களை விட அதனை உண்ணுபவர்களுக்கு பி.எம்.ஐ குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

Related image

மேலும் பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ அவர்களால் தான் நன்றாக வேலை செய்ய முடியும். ஆகவே ஒரு கிண்ணம் நிறைய ஓட்ஸை நிறைத்து, அதில் பழங்கள் மற்றும் குறைவான கொழுப்பினை கொண்ட பால் பொருட்களை சேர்த்து காலையில் உண்டால் ஆரோக்கியமான நாள் தொடங்கும்.

உணவை மென்று உண்ண வேண்டும் :

Image result for உணவை மென்று உண்ண வேண்டும் : சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்

சாப்பிடுவதற்கு 20 நிமிடம் என்று ஒரு நேரத்தை ஒதுக்கி மெதுவாக உண்ணுங்கள். இது டயட் மூலம் இல்லாமல் உடல் எடையை குறைக்க முதன்மையான வழியாகும். ஒவ்வொரு வாய் உணவையும் நிதானமாக மென்று உண்ணுங்கள்.

அதிகமாக தூங்கி எடையை குறையுங்கள் :

Related image

தினமும் இரவு ஒரு மணி நேரம் கூடுதலாக தூங்கினால், ஒரு வருடத்தில் 7 கிலோ வரை உடல் எடை குறையும் என்று மிஷிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். இவரின் ஆராய்ச்சி படி, தூங்கும் போது உடல் எந்த வேளையில் ஈடுபடாமல் இருப்பதால், சுலபமாக 6 சதவீதம் வரை கலோரிகளை எரிக்கலாம்.

அதிக அளவு காய்கறிகளை உண்ணுங்கள் :

Image result for அதிக அளவு காய்கறிகளை உண்ணுங்கள் :

ஒவ்வொரு நாள் இரவும் ஒரே ஒரு காய்கறியை மட்டும் உண்ணுவதற்கு பதில் மூன்று காய்கறிகளை கலந்து உண்ணுங்கள். அதிக வகை இருந்தால் அதிகமாக உண்ணத் தூண்டும். அதனால் அதிகமான பலன்களையும், காய்கறிகளையும் உண்டு உடல் எடையை குறைக்கலாம்.

உணவிற்கு முன் பழங்கள் :

Image result for தினமும் காலை உணவை உண்ண வேண்டும் :

உணவை உண்ணுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு பலன்களை உண்ணுங்கள். இதனால் பழங்கள் வேகமாக செரிமானம் ஆகும். வெறும் வயிற்றில் பலன்களை உண்டால், உடலின் நச்சுத்தன்மை நீங்கி, அதிக ஆற்றல் கிடைத்து உடல் எடை குறையும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்