உடல் எடையை குறைக்க, கீட்டோ டயட்டில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டிய 5 பழங்கள்!
கீட்டோ டயட் என்பது உடல் எடையை குறைந்த கால அவகாசத்தில் குறைக்க உதவும் ஒரு மிகச்சிறந்த டயட் உணவு முறையாக கருதப்படுகிறது; இந்த டயட்டை சரியான முறையில் கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்; இந்த டயட் உணவு முறையில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள உணவுகளும், புரதங்கள் நிறைந்த உணவுகளும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படும்.
இத்தகைய கீட்டோ டயட்டில் என்ன வகை பழங்களை சேர்க்கலாம் என்பது பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
தண்ணீர் பழம்
தண்ணீர்பழம் அதிக நீர்ச்சத்தையும், குறைவான இனிப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது; இப்பழத்தை உண்டால் வயிறு நிறைந்த உணர்வை பெறலாம். ஆகையால் இப்பழம் கீட்டோ டயட்டில் முக்கிய இடம் வகிக்கிறது.
தக்காளி
தக்காளிப்பழமும் கிட்டத்தட்ட தண்ணீர் பழத்தை போன்றதே! ஆனால், தக்காளியில் பிற வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த காய்கறி – பழம் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளை தருகிறது.
அவகேடோ
அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் உடல் எடையை சீராக வைத்தல், உடலின் இயக்கத்தை சரியான அளவில் வைத்தல் என பலவித நன்மைகளை உடலுக்கு தருகிறது; இது சருமத்தின் அழகையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
தேங்காய்
தேங்காய் என்பதன் பெயர் காய் எனும் பதத்தை குறித்தாலும், அது இளநீர் என்னும் இளங்காயின் முற்றிய பதம் ஆகும். தேங்காயில் அதிக நல்ல கொழுப்புச்சத்துக்களும், குறைவான கார்போஹைட்ரேட்டும் நிறைந்துள்ளதால், இது கீட்டோ டயட்டில் முக்கிய இடம் வகிக்கிறது.
பெர்ரிஸ்
பெர்ரி வகையை சேர்ந்த அனைத்து பழங்களும் அதிக நார்ச்சத்துக்களை கொண்டுள்ளதால், இவை உடலின் எடையை குறைக்கவும், உடலின் இயக்கத்தை சீராக வைக்கவும் பெரிதும் உதவுகின்றன.