இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் என்னென்ன?
நமது உடல் சரியாக இயங்க உணவு அவசியம்; அந்த உணவு சில அடிப்படை சத்துக்கள் மற்றும் தாதுக்களை கொண்டிருத்தல் மிக அவசியம். உணவில் சரிவிகித சத்துக்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே உடலின் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
சரியான சத்துக்கள் பெற்ற உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு இரத்தம் என்பது மிக அவசியமான ஒன்று ஆகும். இரத்தத்தில் சரியான அளவு ஹீமோகுளோபின் மற்றும் இரத்த வெள்ளையணுக்கள் இடம் பெற்றிருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த பதிப்பில் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 5 பழங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
அத்திப்பழம்
அத்திப்பழத்தில் அதிக இரும்புச்சத்துக்கள் உள்ளன; அதிக இரும்புச்சத்து கொண்ட இந்த பழங்களை தினமும் உணவில் சேர்த்து உட்கொண்டு வந்தால், இரத்தத்தின் ஹீமோகுளோபினின் அளவு நன்கு அதிகரித்து விடும்.
பேரீட்சை பழம்
பேரீட்சை பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து காணப்படுகிறது. கால் கிலோ பேரீட்சை பழத்தில் 3 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகையால் தினசரி 2-4 பேரீட்சைகளை உட்கொண்டு வந்தால், எளிதில் இரத்தத்தின் ஹீமோகுளோபினின் அளவை அதிகரித்து விடலாம்.
உலர் திராட்சை பழங்கள்!
உலர் திராட்சை பழங்களில், பல வகைப்பட்ட ஏராளமான ஊட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன. அச்சத்துக்களில் இரும்புச்சத்தும் ஒன்று; இத்திராட்சைகளை தினம் உண்டு வருவது, உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்குவதோடு இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆப்ரிகாட் பழம்
ஆப்ரிகாட் பழத்தில், வைட்டமின்கள், தாதுக்கள், பிற சத்துக்கள் என அனைத்தும் நிறைந்துள்ளன. கோடை காலத்தில் இந்த பழங்களை எளிதில் பெற முடியும். இந்த பழங்களை தொடர்ந்து உண்டு வருதல் உடலுக்கு பல நன்மைகளை பயப்பதோடு, இரத்தத்தின் ஹீமோகுளோபின்களை அதிகரிக்கவும் உதவும்.
மாதுளை
மாதுளையில் அதிகமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன; குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டிய பழம்; அனைவரும் உட்கொள்ள வேண்டிய ஒன்று. இந்த பழத்தில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து, இரத்தத்தின் ஹீமோகுளோபினை அதிகரிக்க பெரிதும் உதவும்.