வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதன் 3 முக்கிய படிநிலைகள்..!

cleaning bathroom

வீட்டின் சுத்தம் மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் என்பவை வீட்டின் முக்கிய பகுதிகளான வசிக்கும் பகுதி, சமையலறை மற்றும் பிற பகுதிகளை சார்ந்திருந்தாலும், மேற்கூறிய இரண்டும் முக்கியமாக சார்ந்திருப்பது வீட்டின் கழிவறை சுத்தத்தை தான். வீட்டின் கழிவறை சரியாக இல்லை எனில், அது இல்லத்தில் இருக்கும் அனைவரின் நலனையும் பாதித்து விடும் என்பதை மறத்தல் கூடாது.

வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதில் இருக்கும் 3 முக்கிய படிநிலைகள் பற்றி இந்த பதிப்பில் படிக்கலாம், வாருங்கள்!

கழிவறையின் உட்பகுதி

கழிவறையினை சுத்தம் செய்ய அதன் மீது ஹார்ப்பிக் போன்ற சுத்தப்படுத்த உதவும் திரவங்களை ஊற்றி, தண்ணீர் தொளித்து அலசுதல் மட்டும் முழுமையான சுத்தத்தை தந்து விடாது.

கழிவறையை சுத்தம் செய்கையில் அதன் உட்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தும் திரவம் விட்டு, ஸ்கிரப்பர் அல்லது பிரஸ் கொண்டு நன்கு தேய்த்து அலச வேண்டியது அவசியம்; இவ்வாறு செய்வதால் கழிவறைக் குவளையின் உள்ளாக இருக்கும் அத்தனை கிருமிகளும் ஒட்டுமொத்தமாக மிச்ச மீதியின்றி அழிக்கப்படுகின்றன. இம்முறை முழுமையான சுத்தத்தை வழங்கும்.

கழிவறையின் மேற்பகுதி

கழிவறையின் உட்பகுதியை நன்கு சுத்தம் செய்தது போல், மேற்பகுதியையும் நன்றாக பேக்கிங் சோடா கொண்டு சுத்தம் செய்தால், முழுமையான சுத்தம் கிடைக்கும்; இதுவே வெஸ்டர்ன் டாய்லெட்டாக இருந்தால், ஃபிளஷ் பட்டன் மற்றும் பக்கவாட்டு குழாய் என அனைத்தையும் சுத்தம் செய்ய முயலுங்கள்.

கழிவறை சுத்தம்

கழிவறையில் கை மற்றும் கால்களை சுத்தம் செய்ய உதவும் சோப் வகைகளை கட்டாயம் வையுங்கள்; மேலும் டிஸ்யூ பேப்பர் அல்லது துண்டு வகைகளை கழிவறையில் இடம் பெறச் செய்ய வேண்டியது அவசியம். கழிவறை துர்நாற்றத்தை போக்க உட்பகுதிக்கான நறுமணப்பொருள் மற்றும் ஒட்டுமொத்த கழிவறையின் துர்நாற்றம் போக்கும் நறுமணப்பொருள் என அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள்.

இந்த மாதிரியான கழிவறை அத்தியாவசியப் பொருட்களை சரியாக அமைத்து, காலத்திற்கு ஏற்ப அவற்றை புதுப்பித்து வாருங்கள்; அதோடு தினசரியாக கழிவறையை சுத்தம் செய்ய முயலுங்கள்..!

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்