நம் முன்னோர்கள் சும்மா சொல்லி வைக்கலங்க…!! எல்லாவற்றிற்குள்ளும் ஓர் நன்மை இருக்குங்க…!!!

Default Image

இன்றைய இளம் தலைமுறையினர் நாகரீகம் என்ற பெயரில் தங்களது சருமத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் அழகுபடுத்த பல கெமிக்கல்கள் கலந்த மருந்துகளையும், கிரீம்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களது உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெட்டு போகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையான முறையில் அழகை பெறுவதற்கு பல அழகு குறிப்புகளை கூறியுள்ளனர். அவற்றை பற்றி பார்ப்போம்.

வெள்ளரிக்காய் :

Related image

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தாள், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி கருவளையங்களை நீங்கி விடும். என்று பாட்டி சொல்வார்கள். எனவே தான் இப்போதும், எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும், முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர்.

முகத்தை கழுவுதல் : 

Image result for முகத்தை கழுவுதல் :

முகத்தை தினமும் மூன்று முதல் நான்கு முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

ஆவி பிடித்தல் :

Image result for ஆவி பிடித்தல் :

ஆரம்ப காலத்தில் ஸ்கரப் மற்றும் அழகுக்கு என்ற சிகிச்சைகள் இருக்காது. ஆகவே அப்போது பெண்கள் ஆவி பிடித்து தான், அழகை பராமரித்து வந்தார்கள். எனவே முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு ஆவி பிடித்தால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

பழங்கள் :

Image result for மாம்பழம், பப்பாளி, திராட்சை, எலுமிச்சை

கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பலன்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும். அதிலும் மாம்பழம், பப்பாளி, திராட்சை, எலுமிச்சை போன்ற பழங்கள் மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.

முடி மசாஜ் :

Image result for முடி மசாஜ் :

தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.

தயிர் :

Related image

 

 

கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரை பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டு போன்று, மென்மையாக இருக்கும்.

சூப்பர் மாய்ஸ்சுரைசர் :

Image result for தேங்காய் எண்ணெய்

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோஷன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி இருக்கும்.

எலுமிச்சை :

Related image

பாட்டிகள் சொல்வதில் தவறாமல் கடைபிடிக்க வேண்டியவைகளில் முக்கியமானவை எலுமிச்சையை தலைக்கு பயன்படுத்துவது தான். ஏனெனில் எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந்து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், தலையானது சுத்தமாக போடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்தலும் தடைபடும்.

நெய் :

Related image

 

உதடுகள் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருப்பதற்கு லிபாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்