கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் அரோமா தெரபி….!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்சனை தான். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பல வழிகளில் மருத்துவம் மேற்கொண்டாலும், அதற்க்கு தீர்வு கிடைப்பதில்லை. இதனால் பல பக்கவிளைவுகள் தான் ஏற்படும்.
கூந்தல் உதிர்வு :
நல்லெண்ணெய், கடுகெண்ணெய், ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் என இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கி, தலைக்கு நன்கு மசாஜ் கொடுத்து குளிக்க வேண்டும். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கூந்தல் உதிர்வு நிற்கும்.
கூந்தல் பிசுபிசுப்பு :
கடுகெண்ணெய் 100 மி.லி., ஆலிவ் ஆயில் 100 மி.லி., இவற்றுடன் டீ ட்ரீ ஆயில் 50 துளிகள், ரோஸ்மேரி ஆயில் 50 துளிகள், பேலீஃப் ஆயில் 50 துளிகள் ஆகியவற்றையும் கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் இரவே தலையில் தடவி ஊற வைத்து மறுநாள் குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் கூந்தல் பிசுபிசுப்பு நீங்கும்.
தலை நாற்றம் :
200 மி.லி தேங்காய் எண்ணெயில் லெமன் கிராஸ் ஆயில் 100 துளிகள், நேரொலி ஆயில் 00 துளிகள், தைம் ஆயில் 50 துளிகள், ரோஸ் ஆயில் 100 துளிகள் கலந்து தினமும் தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் தலை நாற்றம் நீங்கும்.
கூந்தல் நுனி பிளவு :
அவகேடா ஆயில் 100 மி.லி.யம் விளக்கெண்ணெய் 100 மி.லி.யும் எடுத்து அதில் 50 மி.லி. தேன், 50 மி.லி. கிளிசரின், fenugreek ஆயில் 100 துளிகள், ஹைபிஸ்கஸ் ஆயில் 100 துளிகள் எல்லாம் கலந்து வாரத்துக்கு 3 நாட்கள் முடியில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். கூந்தல் நுனி பிளவுக்கு இந்த முறை மிகவும் சிறந்தது.