உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறீர்களா…? இதோ… ஏழு நாளில் ஏழு கிலோ எடையை குறைக்க சிறந்த வழிகள்…!!!

suffering from weight gain best ways to lose weight

உடல் எடை அதிகரிப்பால் பலரும் கஷ்டப்படுவதுண்டு. இதற்கான தீர்வை தேடி பலரும் பல பக்கம் அலைந்தாலும், அதற்கான தீர்வு கிடைப்பதில்லை. அதற்க்கு மாறாக வீணான செலவும், பக்க விளைவுகளும் தான் ஏற்படுகிறது. இப்பொது இயற்கையான முறையில் ஏழு நாட்களில் ஏழு கிலோ எடையை குறைப்பதற்க்கான வழிகள் பற்றி பார்ப்போம்.

நாள்-1 :

ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு மறுநாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களை தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம்.

நாள்-2 :

இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்கு பிடித்த உருளைக்கிழங்கை கூட பயமின்றி சாயப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் சேர்த்து குடித்து வர வேண்டும்.

நாள்-3 :

மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பெளல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்து கொள்ள கூடாது.

நாள்-4 :

நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும்.

நாள்-5 :

இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேகா வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, 12 டம்ளர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் குடிக்க வேண்டும்.

நாள்-6 :

ஆறாம் நாளில் மத்திய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

நாள்-7 :

இந்த நாளில் ஒரு கப் சாதத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அது மட்டுமன்றி, இந்நாளில் பழச்சாறுகளை குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்