நம்மிடம் பல தவிர்க்க வேண்டிய பழக்க வழக்கங்கள் அதிகமாக உள்ளது. ஆனால், இப்படி செய்யாதீர்கள் என்று சொன்னால், உடனே அவர்களிடம் இருந்து பதில்,’ அது சின்ன வசூலை இருந்தே பழகிட்டேன், அதனால இந்த பழக்கத்தை மாத்த முடியில’ என்று தான் சொல்வார்கள்.
உங்களிடம் மாற்ற முடியாத பழக்கவழக்கங்கள் இருக்குமானால், அது குணப்படுத்த முடியாத பல நோயகளை கொண்டு வந்து விடும். எனவே கீழே குறிப்பிட்டுள்ள பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் அதனை விட்டு விடுங்கள்.
நம்மில் அதிகமானோர் அடிமையாகி உள்ள பழக்கவழக்கங்களில் ஒன்று நகம் கடித்தல். இந்த பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள், தங்களது விரலில் உள்ள நகத்தை கடிக்கும் போது, அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நமது கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், நமது கண் பார்வைக்கு ஏற்றவாறு தரமான கண்ணாடிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும். விலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக தரம் குறைவான கண்ணாடிகளை வாங்கி உபயோகிக்கும் போது, நமக்கு பல உடல்நலக்கேடுகள் உண்டாகிறது.
அப்படிப்பட்ட கண்ணாடிகளை போட்டுக்கொண்டு சூரியனை பார்க்கும் போது, அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோயை கூட ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நம்மில் அநேகர் நாற்காலியில் அமரும் போது கால்மேல் கால்போட்டு உட்காரும் பழக்கம் உண்டு. இப்படி அமர்வதால், இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், இதனால் உயர் மனா அழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக நம்மில் அதிகமானோர் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவது தவறல்ல. போர்வையை போர்த்தும் போது உச்சி முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டு தூங்க கூடாது.
அப்படி தூங்கினால், கார்பன் டாய் ஆக்ஸைடு அளவு அதிகரித்து, மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நம்மில் அதிகமானோர் ஹெட் போன் உபயோகிக்கும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளனர் இப்படி தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு, தொற்றுநோய் ஏற்பட்டு காத்து கேட்கும் திறன் குறைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
நாகரீகம் என்கிற பெயரில், உயரமான காலணிகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு அணிவதால், குதிகாலில் உள்ள எலும்புகள் தைத்து, வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…