Pea Rice [Image source : Veggiecurean]
பட்டாணியை நம் உணவில் குழம்புகளாகவோ மற்றும் குருமா வகைகளிலும் சேர்த்து பயன்படுத்திருப்போம், வெஜிடபிள் பிரியாணி வகைகளில் கூட சேர்த்து பயன்படுத்தி இருப்போம். ஆனால் இன்று நாம் காண இருப்பது பட்டாணியை மட்டும் வைத்து சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.
பட்டை = இரண்டு
கிராம்பு = 5
பச்சை மிளகாய் = ஐந்து
சோம்பு = இரண்டு ஸ்பூன்
சின்ன வெங்காயம் = 10
இஞ்சி = இரண்டு இன்ச்
பூண்டு = 10
புதினா = ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லி = சிறிதளவு
பெரிய வெங்காயம் = ஒன்று
எண்ணெய் = 4 ஸ்பூன்
நெய் = ஒரு ஸ்பூன்
பட்டாணி = ஒரு கப்
அரிசி = இரண்டு கப்
தேங்காய்ப்பால் = ஒரு கப்
மிக்ஸியில் பட்டை, சோம்பு, கிராம்பு, பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் ,இஞ்சி பூண்டு, புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போனபின் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பிறகு ஊற வைத்த பட்டாணி அல்லது பச்சை பட்டாணியை சேர்த்து அதிலே கிளறவும். அரிசி, அதனுடன் தேவையான தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் நான்கு விசில் வரும்வரை விடவும். இப்போது கம கம வென பட்டாணி சாதம் ரெடி.
இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. அலர்ஜி மற்றும் ஒவ்வாமையை நம்மிடம் நெருங்க விடாது. புரதம் நிறைந்து காணப்படுவதால் தசைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதயம் படபடப்பு போன்ற போன்ற போன்ற போன்ற போன்ற போன்ற போன்றவற்றை சரி செய்கிறது.
இதில் கரையாத நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது செரிமானத்தை தூண்டும். மேலும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்கும்.
கொழுப்பு குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்த பட்டாணியை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது பசி உணர்வையும் கட்டுப்படுத்துகிறது.
தயவுசெய்து குறைவாக இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 100 கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம்.
இதில் உள்ள கரோட்டின் கண் பார்வைத் திறனை அதிகரிக்கிறது. கண் புரை நோய் வராமல் தடுக்கிறது.
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…