ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…

Banana leaf

“விருந்து வைப்பதில் கூட விஞ்ஞானம் படைத்தவன் நம் தமிழன். ஆமாங்க நம் முன்னோர்கள் எவ்வளவோ இலைகள் இருந்தாலும் வாழையிலேயே சாப்பிடுவதற்கு உகந்த இலை என பயன்படுத்தினார்கள். இலையில் தினமும் நாம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் என இந்த பதிவில் பார்ப்போம்.

வாழை இலை வாழ வழி வகுக்கும்என்பார்கள் . இலையில் சூடான உணவுகள் படும்போது உணவில் உள்ள அனைத்து நுண் சத்துக்கள் மற்றும் இலையின் சத்துக்களும் சேர்ந்தே நம் உடலுக்கு கிடைக்கும். வாழை இலையில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது இதில் உள்ள பாலித்தினால் என்ற ஆன்டி  ஆக்சிடென்ட் நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இலையில் உள்ள குளோரோபில் அல்சர் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வு ஆகிறது.

தினமும் நாம் இலையில்  சாப்பிட்டு வந்தால் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. சிறுவயதிலே முதியவர் போன்ற தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.இளநரையை கட்டுப்படுத்துகிறது . மன அழுத்தம் உள்ளவர்கள் பசியின்மையால் அவதிப்படுவார்கள் அந்த நேரங்களில் மூன்று வேளையும்  வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் பசியை தூண்டும். பித்தம் வாதம் கபம் போன்றவற்றை நம் உடலில் சமநிலையாக வைத்துக் கொள்ளும்.

வாழையிலையை  வெட்டிய பிறகும் அதன் ஆக்சிசன் வெளிப்பட்டு கொண்டே தான் இருக்கும்.இது வாழைஇலைக்கு உகந்த சிறப்பு . பழங்கால முதல் இன்று வரை கிராமப்புறங்களில் பாம்பு கடித்தால் வாழ தண்டின் சாறை கொடுப்பார்கள் . இது விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

அது மட்டுமல்லாமல் இயற்கை மருத்துவமனைகளில் தோல் நோய் மற்றும் அலர்ஜி அரிப்புக்கு வாழை இலை குளியல் முறை பயன்படுத்துகிறார்கள். அதாவது வாழை இலையில் ஒரு சில மணி நேரங்கள் வரை இளம் வெயிலில் படுத்துக்கொள்ள வேண்டும் . இவ்வாறு செய்தால் தோல் நோய்கள் குணமாகும்.

எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளிலும் வாழைமரம் தான் முதலில் வைக்கப்பட்டிருக்கும் ஏனென்றால் மக்கள் கூடும் இடங்களில் ஏதேனும் அசம்பாவிதங்களோ விஷக்கடிகளோ ஏற்பட்டால் முதலுதவியாக வாழை இலையோ வாழை மரத்தின் சாறோ பயன்படுத்தப்படும். அதற்காகவே அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் வைக்கப்பட்டிருக்கும்.

சின்னம்மை பாதிக்கப்பட்டவர்களை வாழை இலையில் தேன் தடவி படுக்க வைப்பதன் மூலம் விரைவில் குணமாகும். ஆகவே தினமும் நம் வாழையிலேயே சாப்பிட்டு வந்தால் அது நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாழை இலையில்  சாப்பிட்ட பிறகு அந்த இலை கூட கால்நடைகளுக்கு தீவனமாகவும் மண்ணிற்கு உரமாகவும் பயன்படுகிறது.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஷ்டிக்க்கை தவிர்த்து

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்