சத்தான வாழை பூ சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !
சத்தான வாழை பூ சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஏற்றது.இதனை நாம் காலை உணவாக எடுத்து கொள்ளலாம். இது குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை -கால் கிலோ
பாசி பயறு – 5 ஸ்பூன்
வாழைப்பூ – 2 கப் நறுக்கியது
சின்ன வெங்காயம் -7
பூண்டு -3 பல்
பச்சைமிளகாய் -2
தயிர் -2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை :
முதலில் வாழை பூவை நார் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாசி பயறை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின்பு வாழை ப்பூ, சீரகம் ,வெங்காயம் ,பச்சைமிளகாய் , பூண்டு முதலியவற்றை நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு இவை அனைத்தும் ஆறியவுடன் அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளளவும். ஒரு பாத்திரத்தை எடுத்து அரைத்த விழுதை சேர்த்து அதனுடன் கோதுமை மாவும் தயிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்து கொள்ளவும். பின்பு மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கு தட்டுவது போல் தட்டி ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும் இந்த சப்பாத்தி மாவை போட்டு எடுக்கவும். இப்போது சூடான வாழை பூ சப்பாத்தி ரெடி.