பெண்களே..! உங்கள் சமையலறையில் இந்த 5 பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்..!
பொதுவாக மழைக்காலங்களில் நமக்கு பலவகையான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவது வழக்கம். இந்த தொற்று நோய்களுக்கு நம்முடைய முன்னோர்கள் தங்களது வீட்டிலேயே கைமருத்துவம் செய்து சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் தற்போது நாம் மருத்துவமனைகளுக்கு தான் அடிக்கடி சென்று வருகிறோம். மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவது முக்கியமென்றாலும், வீடுகளில் நமக்கு முதலுதவி சிகிச்சைக்காக இயற்கையான முறையில் சிகிச்சை எடுக்க கூடிய பல்வேறு வழிகள் உண்டு. குறிப்பாக மழைக் காலங்களில் நோய் தொற்றுகள் பரவாமல் தடுப்பதற்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வீட்டு மருத்துவங்களை மேற்கொள்வது வழக்கம் தற்போது இந்த பதிவில் மழைக்காலங்களில் நம்முடைய சமையலறையில் இருக்க வேண்டிய ஐந்து முக்கியமான பொருட்கள் பற்றி பார்ப்போம்.
இஞ்சி
இஞ்சி என்பது பொதுவாக நாம் நமது பெரும்பாலான சமையல்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள். இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், பாரடோல்ஸ், செஸ்கிடர்பீன்ஸ், ஷோகோல்ஸ் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இது சளி மற்றும் காய்ச்சலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கருமிளகு
கருமிளகில் பலவகையான இயற்கை ஆரோக்கியம் நிறைந்த பண்புகள் உள்ளது. அந்த வகையில், குடல் வாயு மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்சினைகளின் வாய்ப்பைக் குறைப்பதோடு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் காய்ச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.
மஞ்சள்
மஞ்சள் நமது உடலில் பல பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய சிறந்த மூலிகை ஆகும். அந்த வகையில், மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பூண்டு
பூண்டு நமது அனைத்து சமையல்களில் பயன்படுத்தக் கூடிய ஒரு பொருள் ஆகும். பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
துளசி
துளசி இயற்கை மருத்துவத்திற்கு ஒரு சிறந்த மருந்து ஆகும். துளசி உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இந்த துளசியை பயன்படுத்தி தேநீர் செய்து குடித்து வந்தால், இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.