லைஃப்ஸ்டைல்

பெண்களே…!பளபளப்பான கூந்தலை பெற வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்…!

Published by
லீனா

பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு நாம்  பயன்படுத்தக் கூடிய ஹேர் மாஸ்க்குகள். 

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நமது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் நமது தலைமுடியை பொறுத்தவரையில் அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நமது தலை முடியின் ஆரோக்கியத்தை சேதம் அடைய செய்வதோடு பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்த கூடும்.

இந்த நிலையில் தற்போது இந்த பதிவில் பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாழை மாஸ்க் 

coconutoil [Imagesource : Representative]

தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாழை கோடைகாலத்திற்கான சிறந்த இயற்கை ஹேர் மாஸ்குகளில் ஒன்று தான். தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஆகிய இரண்டு பொருட்களும் நமது தலைமுடிக்கு ஊட்டம் அளித்து ஈரப்பதத்தை மூட்டும் பண்புகள் கொண்டது.

இது சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய  சேதத்தை தடுப்பதோடு குளோரின் மற்றும் உப்பு நீரில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களில் ஆழமாக சென்று ஈரப்பதத்தை அளித்து முடி உடைவதை தடுக்கிறது. கற்றாழையை பொறுத்தவரையில் புரோட்டியோட்டிக் என்சைம்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை சரி செய்ய உதவுகிறது.

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை கலந்து உங்களது உலர்ந்த அல்லது சற்று ஈரமான கூந்தலில் வேர்கள் முதல் மெதுவாக தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடத்திற்கு பின் நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி கழுவி விட வேண்டும். வெப்பமான காலநிலையில்  உங்களது முடிக்கு அதிகப்படியான நீர் ஏற்றம் தேவைப்பட்டால், இந்த மாஸ்க்கை வாரத்துக்கு ஒரு முறை அல்லது அடிக்கடி பயன்படுத்தலாம்.

தயிர் மற்றும் தேன் மாஸ்க்

வீட்டில் தயாரிக்கப்படும் சிறந்த ஹேர் மாஸ்க்குகளில் ஒன்றுதான் தயிர் மற்றும் தேன் மாஸ்க். இரண்டு பொருட்களிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளது. இது தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது.

honey [Imagesource : Representative]

தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது உச்சந்தலையை தூய்மைப்படுத்துவதோடு மயிர் கால்களை வலுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் புரதம் இதில் அதிகமாக காணப்படுகிறது. தேன் என்பது ஒரு இயற்கையான ஈரப்பதமமூட்டி ஆகும். இது தலைமுடியின் ஒவ்வொரு வேர்க்கால்களிலும் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்கிறது இதனால் மோசமான வானிலை காரணமாக ஏற்படும் வறட்சி தடுக்கிறது.

செய்முறை

இந்த மாஸ்க் தயார் செய்ய அரை கப் தயிர், இரண்டு தேக்கரண்டி தேனை நன்கு கலந்து உங்களது கை விரல்கள் அல்லது பிரஷ்சை பயன்படுத்தி வேர்கள் முதல் நுனிவரை உச்சந்தலையில் மற்றும் வேர்க்கால்கள் முழுவதும் படுமாறு தடவ வேண்டும்.

பின் வெதுவெதுப்பான நீரில் முப்பது நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். கோடைகாலங்களில் சூரியன் மற்றும் குளோரின் வெளிப்பாட்டின் காரணமாக  கூந்தலுக்கு ஏற்பக்கூடிய சேதங்களை இந்த மாஸ்க் தடுக்கிறது இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.

Published by
லீனா

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

5 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

5 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

6 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

7 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

8 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

9 hours ago