பெண்களே…!பளபளப்பான கூந்தலை பெற வேண்டுமா..? இதோ சூப்பர் டிப்ஸ்…!
பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு நாம் பயன்படுத்தக் கூடிய ஹேர் மாஸ்க்குகள்.
காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப நமது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில் நமது தலைமுடியை பொறுத்தவரையில் அதிகப்படியான வெப்பம் மற்றும் ஈரப்பதம் நமது தலை முடியின் ஆரோக்கியத்தை சேதம் அடைய செய்வதோடு பல்வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்த கூடும்.
இந்த நிலையில் தற்போது இந்த பதிவில் பளபளப்பான கூந்தலை பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாழை மாஸ்க்
தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாழை கோடைகாலத்திற்கான சிறந்த இயற்கை ஹேர் மாஸ்குகளில் ஒன்று தான். தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஆகிய இரண்டு பொருட்களும் நமது தலைமுடிக்கு ஊட்டம் அளித்து ஈரப்பதத்தை மூட்டும் பண்புகள் கொண்டது.
இது சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய சேதத்தை தடுப்பதோடு குளோரின் மற்றும் உப்பு நீரில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களில் ஆழமாக சென்று ஈரப்பதத்தை அளித்து முடி உடைவதை தடுக்கிறது. கற்றாழையை பொறுத்தவரையில் புரோட்டியோட்டிக் என்சைம்கள் உள்ளன. இவை முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை சரி செய்ய உதவுகிறது.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயுடன் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை கலந்து உங்களது உலர்ந்த அல்லது சற்று ஈரமான கூந்தலில் வேர்கள் முதல் மெதுவாக தடவி மசாஜ் செய்யவும். பின் 30 நிமிடத்திற்கு பின் நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்தி கழுவி விட வேண்டும். வெப்பமான காலநிலையில் உங்களது முடிக்கு அதிகப்படியான நீர் ஏற்றம் தேவைப்பட்டால், இந்த மாஸ்க்கை வாரத்துக்கு ஒரு முறை அல்லது அடிக்கடி பயன்படுத்தலாம்.
தயிர் மற்றும் தேன் மாஸ்க்
வீட்டில் தயாரிக்கப்படும் சிறந்த ஹேர் மாஸ்க்குகளில் ஒன்றுதான் தயிர் மற்றும் தேன் மாஸ்க். இரண்டு பொருட்களிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளது. இது தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மற்ற உதவுகிறது.
தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது உச்சந்தலையை தூய்மைப்படுத்துவதோடு மயிர் கால்களை வலுப்படுத்த உதவுகிறது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் புரதம் இதில் அதிகமாக காணப்படுகிறது. தேன் என்பது ஒரு இயற்கையான ஈரப்பதமமூட்டி ஆகும். இது தலைமுடியின் ஒவ்வொரு வேர்க்கால்களிலும் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்கிறது இதனால் மோசமான வானிலை காரணமாக ஏற்படும் வறட்சி தடுக்கிறது.
செய்முறை
இந்த மாஸ்க் தயார் செய்ய அரை கப் தயிர், இரண்டு தேக்கரண்டி தேனை நன்கு கலந்து உங்களது கை விரல்கள் அல்லது பிரஷ்சை பயன்படுத்தி வேர்கள் முதல் நுனிவரை உச்சந்தலையில் மற்றும் வேர்க்கால்கள் முழுவதும் படுமாறு தடவ வேண்டும்.
பின் வெதுவெதுப்பான நீரில் முப்பது நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். கோடைகாலங்களில் சூரியன் மற்றும் குளோரின் வெளிப்பாட்டின் காரணமாக கூந்தலுக்கு ஏற்பக்கூடிய சேதங்களை இந்த மாஸ்க் தடுக்கிறது இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.