பெண்களே !..உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க சூப்பரான டிப்ஸ் ரெடி..!

face hair

பெண்களின் பலருக்கும் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் காணப்படும் இதை பூனை முடி என்றும் கூறுவார்கள். இந்த முடிகளை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி என்றும் இது  ஏன் வருகிறது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

முகத்தில் முடி வளர காரணங்கள்

நீர்கட்டிகள்  , ஹார்மோன் பிரச்சனை உள்ள பெண்களுக்கும் பைப்ராய்டு கட்டி போன்று கர்ப்பப்பையில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலும் ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும். இதனால் பெண்களின் கண்ணம் மற்றும் தாடை பகுதிகளில் சிறு சிறு முடிகள் தோன்றுகிறது.

சரி செய்யும் முறை

  • குப்பைமேனி சாறு அரை  ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன், ரோஸ் வாட்டருடன்  பேஸ்ட் பதத்தில் கலந்து முடி உள்ள இடங்களில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து முகம் கழுவி வர வேண்டும். இது முடியின் வேர்க்கால்களை செயலிழக்கச் செய்து முடியை மெல்லியதாக்கி  விழச் செய்யும்.
  • மஞ்சள் கால் ஸ்பூன், கல் உப்பு கால் ஸ்பூன், லெமன் மற்றும் பால் சிறிதளவு இவற்றை கலந்து முகத்தில் முடி உள்ள பகுதிகளில் போடவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து கழுவி வரவும். உப்பு வேர்க்கால்களை வறட்சி  அடைய செய்து முடிகளை உதிரச் செய்யும் .லெமன் ஜூஸ் கருமை நிறத்தை நீக்கும். எலுமிச்சையால்  ஏற்படும் எரிச்சல் போக  பால் சேர்க்கப்படுகிறது.
  •  கரித்தூள்  அல்லது கொட்டாங்குச்சி பவுடர் தேவையான அளவு எடுத்து ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் முடி உள்ள இடத்தில் போடவும்  .
  •  சீரகம் 50 கிராம் ,கருஞ்சீரகம் 5 கிராம், சுருள் பட்டை  100 கிராம் இவற்றை காய வைத்து தனித்தனியே பொடியாக்கி பிறகு கலந்து இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைக்கவும். குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. காலை இரவு என இரண்டு வேலைகளிலும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீர் முக்கால் கிளாஸ் வந்தவுடன் சூடாக குடித்து வரவும். இவ்வாறு செய்வதன் மூலம்  ஆண்ட்ரோஜன் சுரப்பை  கட்டுக்குள் வைக்கிறது, மெட்டபாலிசத்தை சீராக்குகிறது. முகப்பூச்சுடன் இந்த தேநீர் கசாயம் குடித்து வரவும்.

ஆகவே இந்த குறிப்புகளில் எது உங்களுக்கு ஏதுவாக இருக்கிறதோ அதை மூன்று மாதங்கள் செய்து வந்தால் விரைவில் முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி  முகம் பளபளப்பாக பிரகாசிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்