அடடே! அரிப்பு மற்றும் பூச்சி கடி குணமாக இந்த மூன்று பொருள் போதுமா?
நம் உடலில் தோல் அரிப்பு இரண்டு வகைகளில் ஏற்படும். ஒன்று நீண்ட காலமாக இருக்கும் மற்றொன்று பூச்சி கடியால் ஏற்படும் தோல் அரிப்பு, இவற்றுக்கு மேல் பூச்சாக எளிதில் நம் வீட்டிலே எந்த ஒரு செலவும் இல்லாமல் தயார் செய்யலாம். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம். மேலும் இந்த மேற்பூச்சிகளை நாம் பயன்படுத்தும் போது எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது அச்சம் கொள்ள தேவையில்லை.
குப்பைமேனி இலை ஒரு கைப்பிடி, உப்பு ஒரு ஸ்பூன், விரலி மஞ்சள் அரைத்தது ஒரு ஸ்பூன். இவற்றில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் நம் வீட்டிலேயே இருக்கும். இந்த குப்பைமேனி இலை சாலையோரங்களிலும் நீர்நிலை இருக்கும் இடத்திலும் அதிகமாக காணப்படும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு இலை. இதை மூன்றையும் சிறிது துளிகள் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து அரிப்பு மற்றும் பூச்சி கடித்த இடங்கள் தடிப்புகள் போன்ற இடங்களில் மேற்பூச்சாக காலை மாலை என இரு வேலைகளில் தடவி வரலாம். மேலும் கரப்பான் எனப்படும் தோல் தடித்து இருப்பதற்கும் இதை பயன்படுத்தலாம். சேற்றுப் புண்ணிற்கும் இதை தடவி வரலாம். அது மட்டும் இல்லாமல் கால் பாதத்தில் ஏற்படும் வெடிப்புடன் கூடிய அரிப்பிற்கும் இதை பயன்படுத்தலாம். இதனால் அரிப்பின் தீவிரம் குறைக்கப்படும்.
அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?
இதனை உள்ளுக்குள்ளும் குடித்து வரலாம் சிறு நெல்லிக்காய் அளவு எடுத்து வெறும் வயிற்றில் காலை வேளையில் தொடர்ந்து ஏழு முதல் 14 நாட்கள் எடுத்து வரலாம். மேலும் ரத்தத்தை சுத்திகரிக்க அருகம்புல் சாரு 100 எம்எல் எடுத்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை எடுத்து வரலாம்.
தோல் பிரச்சனை இருக்கும் போது எடுத்து தவிர்க்க வேண்டிய உணவுகள்:
மீன் முட்டை கருவாடு போன்ற அனைத்து அசைவ உணவுகள், கத்தரிக்காய் தட்டப்பயிறு அகத்திக்கீரை பாகற்காய், புளிப்பு சுவை கொண்ட பழங்கள் மற்றும் உணவுகள் தவிர்ப்பது நல்லது. இந்த மாதிரி உணவு பழக்கங்களை மேற்கொண்டு குப்பைமேனி சாற்றை மேற்பூச்சாக பூசி உள்ளுக்குள் அருகம்புல் சாறு அருந்தி வந்தால் தோல் பிரச்சனை, அரிப்பு ,பூச்சிக்கடி போன்றவை விரைவில் குணமாகும். கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக இருந்து வரும் தடிப்பு மற்றும் கரப்பான் கூட கட்டுக்குள் வரும்.
வேறு நோய்களுக்கு மருந்து உட்கொண்டாலும் இந்த மேற்பூச்சை பயமின்றி பூசி வரலாம். நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து எந்த ஒரு செலவும் இன்றி குணப்படுத்தலாம். மேலும் இதைத் தாண்டி தொந்தரவு ஏற்பட்டால் மருத்துவரை அணுகலாம்.