பன்னீர் இல்லாமல் பஞ்சு போல ரசகுல்லா செய்ய இந்த ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க..!
ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருள்கள்:
- பெரிய மாவு ஜவ்வரிசி- ஒரு கப்
- பால்- முன்று கப்
- நெய் -ஒரு ஸ்பூன்
- பால் பவுடர்- ஒரு ஸ்பூன்
- பச்சரிசி மாவு -ஒரு கப்
- சர்க்கரை- ஒன்றை கப்
- ஏலக்காய்- 2
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு அகலமான கடாயில் பால் மூன்று கப் சேர்த்து கொதிக்க வைக்கவும். பால் கொதித்த பிறகு அதில் ஒரு கப் பச்சரிசி மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும். இப்போது இவற்றை அரைத்து வைத்துள்ள ஜவ்வரிசி மாவுடன் சேர்த்து அதனுடன் நெய் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அழுத்தி சாப்டாக பிசைய வேண்டும். பிறகு இவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பத்து நிமிடம் இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து ஜவ்வரிசி ஆற வைத்து கொள்ளவும் .
இப்போது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் சர்க்கரை, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ,இரண்டு ஏலக்காயும் சேர்த்து பிசுபிசுப்பாக வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கி விட வேண்டும். இப்போது இதில் வேக வைத்து ஆற வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான பஞ்சு போல ஜவ்வரிசி ரசகுல்லா தயாராகிவிடும்.