கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!..
சாலையோரங்களில் அதிகமாக காணப்படும் ஜூஸ் வகைகளில் கரும்பு சாறும் ஒன்று. 70% சர்க்கரை கரும்பிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. மீதம் 30 சதவீதம் சர்க்கரை வள்ளி கிழங்கிலிருந்து எடுக்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் கரும்பு ஜூஸிற்கு அதிகமான பிரியர்கள் உள்ளார்கள். ஆகவே கரும்பு ஜூஸ் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் அதை யாரெல்லாம் குடிக்கக்கூடாது என என தெரிந்து கொள்வோம்.
கரும்புச்சாறு அதிக அளவு இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், சோடியம் போன்ற தாது சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. விட்டமின் சி யும் போலிக் ஆசிட் காணப்படுகிறது. நார்ச்சத்து மிகக் குறைந்த அளவே உள்ளது.
கரும்புச்சாறு கல்லீரல் நோய்களுக்கு மிகச் சிறந்த பானம் ஆகும். குறிப்பாக மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் சக்தி இந்த கரும்புச்சாருக்கு உள்ளது. பல்லின் ஆரோக்கியத்திற்கு மற்றும் அதன் வலிமைக்கும் மிகச் சிறந்தது. நீர் சத்தை உடம்பில் தக்க வைக்க இந்த கரும்புச்சாறு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இது உடலுக்கு உடனடியான ஆற்றலை கொடுக்கிறது.
உங்க கிட்னியை புதுசா வச்சுக்கணுமா? அப்ப இந்த பதிவை படிங்க..!
இதில் உள்ள கிளைக்காலிக் ஆசிட் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள பயன்படுகிறது. மேலும் சருமத்தை பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும். கர்ப்பிணி பெண்கள் கரும்பு சாறு அருந்த வேண்டும் என்றால் மருத்துவரை ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை குடிக்க வேண்டும் என்றால் இஞ்சி நீக்கி அருந்தலாம். இதில் போலிக் ஆசிட் உள்ளதால் குழந்தையின் நல்ல வளர்ச்சிக்கு உதவுகிறது.
வெயில் காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும் குறைக்கிறது. எனவே கோடை காலங்களில் நாம் இந்த கரும்புச்சாறை அதிகமாக எடுத்துக் கொள்ளலாம். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வது சிறந்தது. அதுவும் மதிய வேலைகளில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த கரும்புச்சாறு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கும். மேலும் ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். கரும்புச் சாரு தயார் செய்த 15 நிமிடத்திற்குள் அருந்த வேண்டும். வீட்டிற்கு பார்சல் போன்ற எடுத்துச் செல்ல கூடாது. ஏனெனில் இது ஆக்சிசனேற்றப்படும் .
தவிர்க்க வேண்டியவர்கள்:
உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், சளி இருமல் தொந்தரவு இருக்கும்போதும் மேலும் சைனஸ் தொந்தரவு இருப்பவர்களும் தவிர்ப்பது சிறந்தது. இதை நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் பேட்டி லிவர் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே கரும்புச் சாலை குளிர் மற்றும் மழைக்காலங்களில் தவிர்த்து நாம் எப்போதாவது அளவோடு எடுத்துக் கொள்வது நம் உடல் நலத்திற்கு சிறந்தத