வீடு துடைப்பதற்கும் முன் இந்த டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Published by
K Palaniammal

Home cleaning tips-வீடு எப்போதும் நறுமணமாக  இருக்கவும் பாசிட்டிவ் எனர்ஜியோடு இருப்பதற்கும், பார்ப்பதற்கு பளபளவென  கண்ணாடி போல மின்னுவதற்கும், பூச்சிகள் வராமல் இருக்கவும் வீடு துடைக்கும் தண்ணீரில் இந்தப் பொருள்களை சேர்த்தாலே போதும். அது என்ன பொருள் என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

  • வீடு துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, அந்து  உருண்டைமற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து துடைத்தால் பூச்சிகள் வராது.
  • கல் உப்பு சேர்ப்பதால் வீட்டில் உள்ள கண் திருஷ்டிகள் அகலும். மேலும் கற்பூரம் வீட்டை பாசிட்டிவாக வைத்திருக்கும் .அந்து  உருண்டை சிறு சிறு பூச்சிகள் வராமல் பாதுகாக்கும்.
  • வீடு துடைப்பதற்கு முன்பு தண்ணீரை மூலை  பகுதிகளில் தெளித்து  விட்டு பிறகு துடைத்தால்  இடுக்குகளில்  உள்ள அழுக்குகள்  சுலபமாக வரும்.
  • ஒவ்வொரு அறைகளை துடைக்கும் போதும் தண்ணீரை மாற்ற வேண்டும், இல்லை என்றால் ஒரு அறையில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி மற்ற அறைக்குள்ளும் சுற்றிக் கொண்டிருக்கும்.
  • வீடு துடைக்கும் போதே பேன் போடக்கூடாது அவ்வாறு செய்தால் தரையில் ஆங்காங்கே திட்டு திட்டாக காணப்படும். முழுவதுமாக துடைத்தபின் பேன்  போட்டு காய வைத்துக் கொள்ளலாம்.
  • உப்பு நீரில் துடைத்த பின் கண்டிஷனரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து ஆங்காங்கே ஸ்பிரே செய்துவிட்டு பிறகு துடைத்தால் வீடு பளிச்சென்று புதுசு போல இருக்கும், பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும். மேலும் விரைவில் தூசி படியாமலும் இருக்கும்.
  • வீடை 12 மணிக்குள் துடைத்து விட வேண்டும். துடைக்கும் போது வீட்டின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதி நோக்கி துடைத்து வரவேண்டும் இவ்வாறு செய்வதால் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜி வெளியேறும்.
  • வீட்டில் உள்ள மர கதவுகள்  மற்றும்  மர சாமான்களை சுத்தம் செய்யும்போது முதலில் ஒரு சிறிய பிரசை கொண்டு தூசிகளை சுத்தம் செய்து விட்டு பிறகு ஒரு துணியில் தேங்காய் எண்ணெயை நனைத்து கதவுகள் மற்றும் மரப்பொருட்களை துடைத்தால் புதுசு போல இருக்கும்.

ஆகவே வீடு துடைக்கும் போது இந்த குறிப்புகளை பயன்படுத்தி துடைத்தால் வீடு எப்போதும் நறுமணமாகவும், பூச்சி தொந்தரவு இல்லாமலும் ,புதிது போலவும் இருக்கும்.

Recent Posts

மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7ஆயிரம் கோடி அபராதம்! ஐரோப்பிய ஆணையம் அதிரடி!

வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…

10 mins ago

SA vs IND : இன்று கடைசி டி20 போட்டி..! இந்திய அணியில் மாற்றம் என்ன?

ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…

1 hour ago

உங்க ஊர் இருக்கா? தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…

2 hours ago

கங்குவா விமர்சனம் : பாசிட்டிவும், நெகட்டிவும் ரசிகர்கள் கூறுவது என்ன?

சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…

11 hours ago

AUS vs PAK : பொளந்து கட்டிய மேக்ஸ்வெல்! 29 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…

13 hours ago

பெய்ரூட் மீது வான்வெளித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மக்கள் வெளியேற வலியுறுத்தல்!

பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…

13 hours ago