இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுகின்றனர். இந்த சமயங்களில் சமையலறை சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் மற்றும் சமையலுக்காக வாங்கும் பொருட்கள் மூலம் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகளுக்கான சில சமையலறை டிப்ஸ் பற்றி பாப்போம்.
காய்ந்த கறிவேப்பிலை
நாம் கறிவேப்பிலை வாங்கி நீண்ட நாட்கள் ஆனால், அது காய்ந்து விடும். அந்த கறிவேப்பிலையை நாம் தூக்கி தான் எறிவதுண்டு. அவ்வாறு தூக்கி எரியாமல், அதை இட்லி அவிக்கும் தண்ணீரில் போட்டு, இட்லி அவித்தால், இட்லி சாப்பிடும் போது கமகம என்று மணமாக இருக்கும்
மீன்
மீன் என்றாலே அதில் வாடை வரத்தான் செய்யும். அந்த வாடையை நம்மால் முற்றிலுமாக குறைக்க முடியாவிட்டாலும், ஒரு அளவுக்கு அதை குறைக்கலாம். அந்த வகையில், மீனை சுத்தம் செய்து, மஞ்சள் போடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையை தடவி வைத்தால் மீன் வாடை சற்று குறையும்.
கிழங்குகள்
சில சமயங்களில் நாம் கிழங்குகளை அவிக்கும் போது, அது அவிய அதிக நேரம் எடுக்கும். எனவே கிழங்குகளை அவிப்பதற்கு முன், 10 நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் அவிந்து விடும்.
கடலைகள்
நாம் கொண்டை கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றை நாம் சமையல் செய்வதற்கு முதல் நாளே ஊற வைத்து சமைப்பதுண்டு. அவ்வாறு ஊற வைக்க மறந்து விட்டால், கடலையை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்து, அதனை குக்கரில் அவிய போட்டால் நன்கு அவிந்து விடும்.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…