KitchenTips : KitchenTips : இல்லத்தரசிகளே..! உங்கள் வேலையை எளிதாக்கும் சூப்பர் டிப்ஸ் இதோ..!

kitchen tips

இல்லத்தரசிகள் தங்களது பெரும்பாலான நேரத்தை சமையலறையில் தான் செலவிடுகின்றனர். இந்த சமயங்களில் சமையலறை சார்ந்த பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் சமையல் மற்றும் சமையலுக்காக வாங்கும் பொருட்கள் மூலம் பலவகையான பிரச்னைகளை சந்திக்கின்றனர்.  தற்போது இந்த பதிவில், இல்லத்தரசிகளுக்கான சில சமையலறை டிப்ஸ் பற்றி பாப்போம்.

காய்ந்த கறிவேப்பிலை 

நாம் கறிவேப்பிலை வாங்கி நீண்ட நாட்கள் ஆனால், அது காய்ந்து விடும். அந்த கறிவேப்பிலையை நாம் தூக்கி தான் எறிவதுண்டு. அவ்வாறு தூக்கி எரியாமல், அதை இட்லி அவிக்கும்  தண்ணீரில் போட்டு, இட்லி அவித்தால், இட்லி சாப்பிடும் போது கமகம என்று மணமாக இருக்கும்

மீன் 

மீன் என்றாலே அதில் வாடை வரத்தான் செய்யும். அந்த வாடையை நம்மால் முற்றிலுமாக குறைக்க முடியாவிட்டாலும், ஒரு அளவுக்கு அதை குறைக்கலாம். அந்த வகையில், மீனை சுத்தம் செய்து, மஞ்சள் போடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையை தடவி வைத்தால் மீன் வாடை சற்று குறையும்.

கிழங்குகள் 

சில சமயங்களில் நாம் கிழங்குகளை அவிக்கும் போது, அது அவிய அதிக நேரம் எடுக்கும். எனவே கிழங்குகளை அவிப்பதற்கு முன், 10 நிமிடங்கள் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் அவிந்து விடும்.

கடலைகள்

நாம் கொண்டை கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றை நாம் சமையல் செய்வதற்கு முதல் நாளே ஊற வைத்து சமைப்பதுண்டு. அவ்வாறு ஊற வைக்க மறந்து விட்டால், கடலையை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்து, அதனை குக்கரில் அவிய போட்டால் நன்கு அவிந்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்