கிச்சன் கில்லாடிகளே..இந்த டிப்ஸயும் கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

பல  பெண்களின் பாதி வாழ்க்கை சமயலறையில் தான் கழிகிறது. ஏனென்றால் 70% நேரம் அவர்கள் அங்கு தான் செலவிடுகிறார்கள். இனிமே அந்த கவலை வேண்டாம்.உங்கள் வேலைகளை சுலபமாக முடிக்க பல வீட்டுக் குறிப்புகள் இப்பதிவில் பார்ப்போம்.

பாத்ரூம் கரை நீங்க

நம் பலரது வீட்டில் பாத்ரூம் கறை  படிந்து  மஞ்சள் நிறமாக காணப்படும் அவற்றை போக்க கோலமாவு பொடியை தூவி விட்டு பத்து நிமிடம் கழித்து பிரஷ்சை வைத்து தேய்த்தால் கறை  நீங்கி புதுசு போல பளபளக்கும்.

சீப்புகள் பராமரிப்பு 

நம் புதிதாக வாங்கும் ஒரு சில சீப்புகள் கீறல்களை ஏற்படுத்தும். அதற்கு தோசை கல்லை மிதமான தீயில் சூடேற்றி அதிலே சீப்பை வைத்து முன்னும் பின்னும் தேய்த்து விட்டால் தலை வாருவதற்கு ஈஸியாகவும் கீறல் உருவாகாமலும் இருக்கும்.

வடிகட்டி பராமரிப்பு

பழைய வடிகட்டியை தூக்கி எறியாமல் அந்த வலையை மட்டும் எடுத்து சிங்கிள் மாட்டி வைத்தால் நாம் கழுவும் சின்ன சின்ன குப்பைகள் சிங்குக்குள் போகாமல் அந்த வளையிலேயே தங்கிவிடும் இதனால் சிங் அடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம், மேலும் சுத்தம் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

தேங்காய் கெடாமல் இருக்க

கோடை காலத்தில் தேங்காய் உடைக்காமல் வைத்தாலும் ஒரு சில நாட்களில் கெட்டுவிடும். அப்படி ஆகாமல் இருக்க உடைக்காமலே ஃப்ரிட்ஜில் வைத்தால் மேலும் சில நாட்களுக்கு நன்றாக இருக்கும். உடைத்த தேங்காய் இருந்தால் ஃப்ரீசரில் வைக்கலாம்.

பாத்திரங்கள் அடி பிடிக்காமல் இருக்க 

எடை குறைவான பாத்திரங்களை அடுப்பில் வைத்தால் கறுப்பாகிவிடும்   . அதற்கு பதிலாக அடுப்பில் வைப்பதற்கு முன்பே எண்ணெய்  ஊற்றி பிறகு வைத்தால் எண்ணெயும்  பாத்திரமும் ஒரே நேரத்தில் சூடாகும் இதனால் பாத்திரம் கருப்பாகாமல் இருக்கும்.

பால் பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்க

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிய பிறகு பால் ஊற்றினால் அந்தப் பால் பாத்திரத்தில் ஒட்டாது கழுவுவதற்கும் சுலபமாக இருக்கும்.

ஆகவே இல்லத்தரசிகளை இந்த முறைகளை பின்பற்றி உங்கள் நேரத்தையும் வேலையையும் எளிதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்