Kidney Stone : சிறுநீரகத்தில் கற்களா..? அப்ப கண்டிப்பா இதை செய்து சாப்பிடுங்க..!

Kidneystone

இன்று பெரும்பாலானவர்களுக்கு சிறுநீரக கற்கள் பிரச்னை  காணப்படுகிறது. இந்த கற்கள் கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் போன்ற தாதுக்களின் படிகங்களால் ஆனவை. இந்த பிரச்னை ஏற்படுவதர்க்கு காரணம் என்னவென்றால், அதிகப்படியான கால்சியம், யூரிக் அமிலம் அல்லது சிஸ்டைன் உள்ள உணவுகளை உண்ணுதல்.

குறைந்த அளவு தண்ணீர் குடித்தல், சிறுநீரில் அதிக அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை காணப்படுதல், சிறுநீர்க்குழாய் தொற்று போன்ற பிரச்னைகளால் இந்த கற்கள் உருவாகிறது. இந்த கற்களை கரைக்க கூடிய ஆற்றல் ரணகள்ளி தாவரத்திற்கு அதிகமாக உள்ளது.

ரணகள்ளி ஒரு சக்திவாய்ந்த மூலிகை ஆகும், இது பல மருத்துவ நன்மைகளை வழங்குகிறது. ரணகள்ளி சாற்றை உட்கொள்வது சிறுநீரக கற்கள், சளித்தொற்றுகள், வீக்கம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இப்படிப்பட்ட மருத்துவகுணம் கொண்ட ரணகள்ளி இலையில் துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • ரணகள்ளி – 100 கிராம்
  • தேங்காய் – 1/2 கப், துருவியது
  • பச்சை மிளகாய் – 2, நறுக்கியது
  • இஞ்சி – 1/2 டீஸ்பூன், நறுக்கியது
  • பூண்டு – 2 பல், நறுக்கியது
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது

செய்முறை 

 ஒரு கடாயில் உளுத்தம் பருப்பு, ரணகள்ளி இலை, பச்சை மிளகாய்,   வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு வறுத்து எடுத்தவற்றை மிக்ஸியில் போட்டு அதனுள் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். இப்போது ஆரோக்கியமான சுவையான ரணகள்ளி துவையல் தயார்.

இதையும் படிங்க – Ladies Figer : வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு தன்மை போக சூப்பர் டிப்ஸ் இதோ..!

இந்த துவையலை இட்லி, தோசை சாதம் என எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம் இது சுவையாக இருப்பதுடன் சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கு முக்கியமாக நல்ல மருந்தாகும். எனவே சிறுநீரக கற்கள் பிரச்சினை உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை சாப்பிட்டு வந்தால் பூரண குணமடையலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
kaliyammal seeman
Rain update in TN
BAN VS NZ
Shankar - dragon
Madras High court - Isha Yoga centre
india vs pakistan - shreyas iyer