Karuppu Kavuni Laddu : வீட்டிலேயே லட்டு செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. இந்த லட்டை நாம் கடைகளில் தான் அதிகமாக வாங்கி சாப்பிடுகிறோம். அபூந்தி லட்டு, ரவா லட்டு, முந்திரி லட்டு, பாதாம் லட்டு என பல வகை உண்டு.
ஆனால் இந்த லட்டுகளை நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் எப்படி செய்யலாம் என்று தான் பார்க்க வேண்டும். தற்போது இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசியை வைத்து லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கருப்பு கவுனி – 1 கப்
- ஏலக்காய் – 4
- கருப்பு எல் – அரை கப்
- வேர்க்கடலை – அரை கப்
- நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
- தேன் – 4 ஸ்பூன்
- நெய் – சிறிதளவு
Karuppu Kavuni Laddu செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் கருப்பு கவுனி அரிசியை போட்டு, அதனுடன் நான்கு ஏலக்காயும் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கருப்பு எல் மற்றும் வேர்க்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்து வைத்துள்ள கருப்பு கவுனி அரிசி, ஏலக்காய், எல் மற்றும் வேர்க்கடலையை மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள மாவில், நாட்டு சர்க்கரை, தேன், நெய் ஆகியவற்றை ஊற்றி நன்கு லட்டு பதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நமக்கு தேவையான அளவு அளவில் உருண்டையாக உருட்டி எடுத்து பரிமாறலாம். கருப்பு கவுனி அரிசியில் செய்யப்படும் லட்டு சுவையானதாக மட்டுமல்ல, நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக கூட காணப்படுகிறது. இந்த அரிசியில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது.