அடேங்கப்பா.! கருஞ்சீரக எண்ணெய் இத்தனை நோய்களை தீர்க்குமா?

black seed oil

கருஞ்சீரகம் -கருஞ்சீரக எண்ணையின்  மருத்துவ பயன்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .

கருஞ்சீரகத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது  சித்தா, ஆயுர்வேதா ,யுனானி போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கருஞ்சீரக எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .

சத்துக்கள் :

இதில் நார்ச்சத்து, விட்டமின் சி, விட்டமின் ஈ ,விட்டமின் பி12 ,நியாஸின்,  பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது.

கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தும் முறை:

முக்கிய குறிப்பு

இந்த எண்ணையை உள்ளுக்குள் பயன்படுத்த வேண்டும் என்றால், சிறியவர்களுக்கு  மூன்று சொட்டும்[5-18வயது ] , பெரியவர்கள் என்றால் ஐந்து சொட்டு அளவும் எடுத்து பயன்படுத்த வேண்டும். இந்த அளவுகளுக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

வழுக்கை தலையில் முடி வளர

இரவில் கருஞ்சீரக எண்ணையை 10 சொட்டு எடுத்து தலையில் தடவி மசாஜ் செய்து காலையில் குளித்து வர முடி வளர்ச்சியை தூண்டும்.  இதில் தைமோனின்,  நைஜிலோன்  போன்ற சத்து உள்ளது இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, மேலும்  கிருமி தொற்று,பொடுகு  போன்றவற்றை நீக்கும்.

முகம் அழகு பெற

ஆலிவ் எண்ணெய் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் சம அளவு எடுத்து உடல் மற்றும் முகத்தில் தேய்த்து வந்தால் வெயிலின் தாக்கம் உடலுக்குள் ஊடுருவி செல்லாது. உடல் கருக்காது, மேலும் கருந்தேமல் ,கருவளையம், அம்மை தழும்பு, காய வடு போன்றவை மறையும்.

ஆண்மை குறைவு

மாலை நேரங்களில், பாதம் பாலுடன் ஐந்து சொட்டு கருஞ்சீரக எண்ணையை கலந்து குடித்து வர ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

இளம்பிள்ளை வாதம் ,பக்கவாதம் குணமாக

கருஞ்சீரக எண்ணையை தேனில் கலந்து காலை ,மாலை சாப்பிட்டு வர குணமாகும். சிறியவர்களின் என்றால் 3சொட்டும், பெரியவர்கள் என்றால் ஐந்து சொட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் மூக்கில் ஒவ்வொரு சொட்டு விட்டு மூக்கை சிந்தி விட நோயினால் ஏற்படும் தாக்கம் குறையும்.

மயக்கம் ,தலை சுற்றல் குறைய

அரை எலுமிச்சை சாருடன் கருஞ்சீரக எண்ணையை கலந்து குடித்து வர வேண்டும்.

மேலும் இருதய வலி ,இருதய அடைப்பு, ஆஸ்துமா, மஞ்சள் காமாலை செரிமான தொந்தரவு, கண்டுபிடிக்க முடியாத பல நோய்களுக்கும்  வெற்றிலையின்  இருபக்க காம்புகளை நீக்கி கருஞ்சீரக எண்ணையை வயதுக்கேற்ப  கொடுத்த அளவுகளுடன் தடவி மென்று சாப்பிட குணமாகும்.

மேலும் 50 சதவீதம் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது. புற்றுநோயாளிகள் கருஞ்சீரக குடிநீரைக் கூட தினமும் எடுத்துக் கொள்ளலாம் ,இது சிறந்த பலனைத் தரும்.

ஆகவே குறிப்பிட்டுள்ள அளவுகளின் படி கருஞ்சீரக எண்ணையை பயன்படுத்தி அதன் பயன்களை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்