முகம் பளிச்சுன்னு மாற கடலைமாவின் அசத்தலான அழகு குறிப்புகள்..!
கடலை மாவு ஒரு ஸ்பூன், எலுமிச்சை ஒரு ஸ்பூன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் பூசி 45 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வேண்டும்.
சென்னை –கடலை மாவை வைத்து முகப்பொலிவை எவ்வாறு அதிகரிக்கச் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
நம் முன்னோர்கள் குளிப்பதற்காக கடலை மாவு மற்றும் பயத்தை மாவை பயன்படுத்தி வந்தனர் . சரும அழகிருக்கும் சரும பாதுகாப்பிற்கும் கடலை மாவு முக்கிய பங்கு வகிக்கிறது .இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது யூட்யூப் பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார்.
முகப்பரு மற்றும் கரும்புள்ளி நீங்க;
கடலை மாவு தேவையான அளவு எடுத்து அதை ரோஸ் வாட்டர் உடன் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி வரவும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
முகத்தில் உள்ள சிறு முடிகள் நீங்க;
கடலை மாவு, மற்றும் வெந்தய பொடி சம அளவு,கஸ்தூரி மஞ்சள் அரை ஸ்பூன் எடுத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு முகம் கழுவி வர வேண்டும், இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் உதிர்ந்து விடும்.
கடலை மாவு ஸ்க்ரப்;
கடலைமாவை மற்றும் அரிசி மாவு சம அளவு எடுத்து ஸ்கிரப்பராக முகத்தில் மிருதுவாக தேய்த்து கழுவிக் கொள்ளலாம். பார்லரில் செய்யப்படும் ப்ளீச்சிங் முறையை தொடர்ந்து செய்து வந்தால் சரும பாதிப்பு ஏற்படும். ஆனால் இவ்வாறு இயற்கையான முறையில் செய்து வந்தால் சருமம் சேதம் அடைவதை தவிர்க்கலாம் .மேலும் கடலை மாவு சிறந்த ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகவும் செயல்படுகிறது.
முகத்தில் கருமை நீங்க [sun tan]
கடலை மாவு ஒரு ஸ்பூன், எலுமிச்சை ஒரு ஸ்பூன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் பூசி 45 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வர வேண்டும்.
குழந்தைகள் குளிப்பதற்கு கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள், பைத்த மாவு சேர்த்து கலந்து தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் பிற்காலத்தில் சரும பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கலாம். கடலைமாவில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் தன்மை உள்ளது.அதனால் சருமம் வறட்சி அடையாமல் பாதுகாத்துக் கொள்ளும்.
கடலை மாவை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமம் மிகவும் மிருதுவாக இருக்கும். மேலும் இறந்த செல்களை நீக்குகிறது . விரைவில் முகச் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கிறது. கருவளையம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
கெமிக்கல் நிறைந்த கிரீம்களையும் முக பூச்சுகளையும் வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் அனைவரது வீடுகளிலும் எளிமையாக கிடைக்கக்கூடிய கடலைமாவை பயன்படுத்தி நம்முடைய சரும அழகை பாதுகாத்துக் கொள்வோம் .