உருளைக்கிழங்கு இருந்தா போதும்.. பத்து நிமிஷத்துல லஞ்ச் ரெடி..!
Potato fried rice- உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- உருளைக்கிழங்கு= 2
- எண்ணெய் =ஐந்து ஸ்பூன்
- கடுகு= ஒரு ஸ்பூன்
- உளுந்து= அரை ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- வரமிளகாய் =2
- வெங்காயம்= ஒன்று
- இஞ்சி =ஒரு துண்டு
- பூண்டு= எட்டு பள்ளு
- மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
- மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
- கரம் மசாலா =ஒரு ஸ்பூன்
- மல்லித்தூள் =அரை ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
- சாதம்= மூன்று கப்
செய்முறை;
முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,சீரகம் ,சிறிதளவு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். இப்போது வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் , பிறகு பூண்டை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்கவும் .இஞ்சியையும் தட்டி சேர்த்துக்கொண்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கையும் சேர்த்து கலந்து வேக விடவும் .வெந்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து கலந்துவிட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ளவும் .இரண்டு நிமிடம் கழித்து சாதத்தை சேர்த்து கிளறி விடவும் .இப்போது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் உருளைக்கிழங்கு சாதம் தயாராகிவிடும்.