முட்டையை இப்படி சாப்பிட்டாலே போதும்! உடல் எடை சிக்குன்னு குறையுமாம் !
முட்டை நமது உடலுக்கு பல வகையான ஆற்றல்களை கொடுக்கிறது. முட்டையில் புரதம் மற்றும் பல ஊட்ட சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. முட்டையில் வைட்டமின் ஏ ,கால்சியம் , சோடியம்,மெக்னீசியம் பாஸ்பரஸ், வைட்டமின் டி என பல சத்துக்களை கொண்டுள்ளது.
தினமும் காலை உணவாக முட்டையை எடுத்து வந்தால் அது நமது உடல் எடையை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிப்பதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
முட்டையை இந்த முறையில் சமைத்து சாப்பிட்டு உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
முட்டைரெசிபிகள் :
தக்காளி ,முட்டை , பீன்ஸ் , சீஸ் முதலியவற்றை மைக்ரோஅவனில் பேக் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிகவும் வேகமாக குறையும்.இதனை காலை உணவாக எடுத்து வந்தால் மிகவும் நல்லது.
மீன் ,தக்காளி ,கொத்தமல்லி , முட்டை ,சீஸ் ஆகியவற்றை மைக்ரோ அவனில் பேக் செய்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.
இதே போல் கீரையையும் முட்டையையும் நாம் தினமும் நமது உணவில் வேக வைத்து எடுத்து வந்தால் மிகவும் நல்லது. இது உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு நாம் தினமும் காலை உணவாக முட்டையை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.