ரைஸ் இருந்தா போதும்.. சூப்பரான கிறிஸ்துமஸ் கேக் ரெடி..!
கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஸ்பான்ச் ரைஸ் கேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
சென்னை :கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஸ்பான்ச் ரைஸ் கேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பச்சரிசி -ஒரு கப்[200 கி ]
- ஏலக்காய்- 4
- வெல்லம் -250 கிராம்
- சோடா- உப்பு அரை ஸ்பூன்
- நெய்- இரண்டு ஸ்பூன்
- தேங்காய்- ஒரு கப்
செய்முறை:
முதலில் பச்சரிசியை கழுவி மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு அதில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவு தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். பிறகு தேங்காயை துருவி அதில் ஏலக்காய் சேர்த்து அரைத்து பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் மற்றும் வெல்லத்தை அரைத்த மாவில் கலந்து அதில் அரை ஸ்பூன் சோடா உப்பு மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி காய வைத்துக் கொள்ளவும் .பிறகு கலந்து வைத்துள்ள மாவையும் அதில் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு ஹை ப்ளேமில் வைக்கவும். மாவு நன்கு நுரை கட்டி வந்த பிறகு மிதமான தீயில் வைத்து மூடி வைத்து விடவும். 12 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு இறக்கி விடவும். மூடியில் தண்ணீர் இருந்தால் அதை துடைத்துவிட்டு மீண்டும் மூடி போட்டு 15 நிமிடங்கள் வைத்து விட வேண்டும். பிறகு வேறு ஒரு பாத்திரத்திற்கு அதை மாற்றி விட்டு நறுக்கி சாப்பிடலாம் .