கோடை காலம் தொடங்கி விட்டாலே குளிர்ச்சிக்காக தொடைக்கு இதமாக மக்கள் பலரும் ஐஸ்கிரீம்களை வாங்கி சாப்பிடுவது வழக்கம். ஐஸ்கிரீமை பிடிக்காதவர் யாருமே இருக்க முடியாது என்று கூட கூறலாம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட்டு வருகிறார்கள்.
மேலும், ஐஸ்கிரீம்களை கடைக்கு சென்று தங்களுக்கு பிடித்த பிளேவர்களை வாங்கி சாப்பிடுவது ஒரு சுவை என்றால் அதனை வீட்டில் செய்வது சாப்பிடுவது அது ஒரு தனி சுவைதான். இந்நிலையில் வீட்டிலேயே மிகவும் சுலபமாக சுத்தமாக எப்படி 2 ஐஸ்கிரீம்களை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
1.பூசணிக்காய் ஐஸ்கிரீம்
கோடை காலத்தில் பூசணிக்காய் நல்லது. எனவே, அதனை நாம் ஐஸ்கிரீம்-ஆக செய்து சாப்பிட்டால் இன்னுமே நல்லது தான். இதனை எப்படி செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் சுண்டிய பால் (Condensed Milk), கிரீம், 1-1/2 கப் பூசணிக்காய், 1 கப் சர்க்கரை, 1 தேக்கரண்டி தரையில் இஞ்சி,1 தேக்கரண்டி தரையில் இலவங்கப்பட்டை,1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு,1/4 தேக்கரண்டி உப்பு,1/8 தேக்கரண்டி கிராம்பு.
செய்முறை
ஒரு பெரிய கிண்ணத்தில், அனைத்து பொருட்களையும் இணைக்கவும். முதலில் ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் பூசணிக்காவை நன்றாக கழுவி சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளுங்கள். கலர் மாறும் வரை நன்றாக வதக்கி எடுத்த பிறகு மிக்ஸி ஜாரில் ஆறவைத்து சுத்தமான பசும்பாலை அதில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். சிறுதளவு இலவங்கப்பட்டை, கிராம்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஒரு கடாவை எடுத்துக்கொண்டு அதில் அரைத்துவைத்திருக்கும் பூசணிக்காவை போடுங்கள். இது அனைத்தையும் சேர்து அரைத்த கலவையில் 2 கப் சுண்டிய பால் சேர்ந்துவிடுங்கள், இதற்குப்பிறகு 1 கப் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள், பிறகு சுவைக்காக 1 தேக்கரண்டி வெண்ணிலா சாறு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பிறகு ஐஸ்கிரீமுக்கு தேவையான அளவிற்கு ஒரு குடுவையை எடுத்துக் கொண்டு அதில் சேர்த்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு இரண்டு மணி நேரம் கழித்து அதனை எடுத்து மீண்டும் நன்றாக கலக்கி அடுத்ததாக மீண்டும் ஒருமுறை 3 நேரம் குளிர்சாதனப்பட்டியில் வைத்து எடுத்தால் அட்டகாசமான பூசணிக்காய் ஐஸ்கிரீம் ரெடி
2.தர்பூசணி ஐஸ்கிரீம்
இந்த தர்பூசணி ஐஸ்கிரீம் இந்த கோடையில் நீங்கள் வீட்டில் செய்யும் சிறந்த ஐஸ்கிரீம். உண்மையான பொருட்களால் செய்யப்பட்ட, தர்பூசணி சுவை நிறைந்த இந்த ஐஸ்கிரீம் உங்களுக்கு ஒரு உண்மையான விருந்தாகும்.
தேவையான பொருட்கள்
தர்பூசணி சாறு, ஃப்ரெஷ் க்ரீம் (அமுல் ப்ளூ பேக்), கன்டென்ஸ் பால், வெண்ணிலா சாறு, பால்
செய்முறை
தர்பூசணி சாறு தயாரிக்க, பழத்தை தோலுரித்து, பொடியாக நறுக்கவும். சாற்றைக் கலந்து வடிகட்டவும். நீங்கள் சாறு பிரித்தெடுக்க ஒரு சாறு பயன்படுத்தலாம். பின் ஒரு பாத்திரத்தில் 400 மில்லி குளிர்ந்த ஃப்ரெஷ் கிரீம் எடுத்துக் கொள்ளவும்.அதில் 1 கப் இனிப்பு மற்றும் பால் சேர்த்து மெதுவாக கலக்கவும். பிறகு இதில் தயார் செய்த தர்பூசணி சாறுவை சேர்க்கவும்.
இது அனைத்தையும் சேர்த்த பிறகு சுவைக்காக சிறிதளவு வெண்ணிலா சாறு சேர்த்துக்கொள்ளவும். பிறகு இது அனைதையும், குளிர்சாதன பெட்டியில் 8 மணி நேரம் உறைய வைக்கவும். பின் எடுத்து பார்த்தால் அட்டகாசமான தர்பூசணி ஐஸ்கிரீம் ரெடி
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…