அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?

curd

காலம் காலமாக நம் உணவில் சேர்த்து கொள்ளக்கூடிய  முக்கியமான உணவு பொருள் தயிர். இந்த தயிரை மோர் குழம்பு, தயிர் வெங்காயம், தயிர் சாதம் என்று பலவகையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள். இது எளிமையான உணவாக இருந்தாலும் அதிக மருத்துவ குணம் நிறைந்தது. மலிவான விலையில் ஒரு மருத்துவம் என்று கூறலாம். இந்த தயிரை நாம் எப்படி பயன்படுத்துவது.எப்போது பயன்படுத்துவது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஆஹா! அண்ணாச்சியில் அண்ணாந்து பார்க்கக்கூடிய நன்மைகளா..!

தயிர் மிக எளிமையாக செரிமானம் ஆகக் கூடியது. பாலை விட தயிர் விரைவில் செரிமானம் ஆகக் கூடியது. பால் ஒரு மணி நேரத்தில் 32 சதவீதம் மட்டுமே ஜீரணிக்கிறது. ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91% ஜீரணம் ஆகிவிடும். தயிரில் விட்டமின் டி , கால்சியம் ,பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான அத்தியாசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்டுள்ளது.

செரிமான மண்டலம்
தயிரில் உள்ள லாக்டோ பேசிலெஸ் என்ற நல்ல பாக்டீரியா ஜீரணத்தை தூண்டக்கூடியது. இது கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்ட்டீரியா  வளரச் செய்யும்.

குடல்
இதில் உள்ள ப்ரோபையோட்டிக்  குடலுக்கு நன்மை பயக்கும். நம் குடல் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம். தயிரை  நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் 70 சதவீதம் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கலாம்.

எலும்பு மற்றும் பல்
குழந்தை பருவத்திலிருந்து தயிரை உணவில் சேர்த்து வந்தால் எதிர்காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அண்டாது இதில் உள்ள கால்சியம் பல் மற்றும் எலும்புகளுக்கு பலத்தை தரும்.

ஈஸ்ட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தயிரைத் தொடர்ந்து எடுத்து வந்தால் அதிலிருந்து விடுபட முடியும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிகளை போக்கக்கூடியது.

தலைமுடி

இதில் அதிக அளவு புரோட்டின் இருப்பதால் தசை   மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு சிறந்தது. தயிரை நேரடியாக தலைமுடிக்கு தடவி வந்தால் பொடுகை போக்கி முடி வரட்சியாகாமல் பாதுகாக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய கார்டிசோல்  என்ற ஹார்மோன் சுரப்பை சமநிலைப்படுத்தும். இதனால் ஏற்படும் பதட்டம், படபடப்பு போன்றவற்றை தடுக்கலாம்.

அல்சர்
மாறி வரக்கூடிய உணவு முறை நல்லது செய்கிறதோ இல்லையோ ஆனால் பல நோய்களை தருகிறது அதில் குறிப்பாக அல்சர். இந்த அல்சருக்கு மிகச்சிறந்த உணவு தயிராகும்.

குழந்தைகளுக்கு உடல் எடை கூட தினமும் மதிய வேலைகளில் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.தயிரை மதிய உணவில் மட்டுமே சேர்த்து கொள்வது சிறந்தது . இரவு நேரங்களில் தயிரை பயன்படுத்துவதை தவிர்க்கவும் .தயிரை சூடு படுத்தியோ அல்லது சூடான உணவிலோ கலந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
மேலும் அதிக அளவில் தயிரை எடுத்துக் கொண்டால் ரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அது மட்டும் இல்லாமல் அரிப்பு, வீக்கம் போன்றவற்றையும் உண்டாக்கும். எனவே அளவோடு எடுத்துக்கொண்டு அதன் பயன்களை பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested