கருப்பையில் குழந்தை தங்கவில்லையா ?அப்போ இதெல்லாம் பாலோ பண்ணுங்க .!

குழந்தையின்மை -குழந்தையின்மையை போக்கி கரு தங்க இயற்கை மருத்துவ குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.
திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகும் கரு தங்கவில்லை என்றால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை கட்டி, நீர்க்கட்டி ,கருமுட்டை ஆரோக்கியம் இல்லாமல் இருப்பது, தைராய்டு மற்றும் ஹார்மோனல் இம்பேலன்ஸ் போன்றவையாகும் .
ஆண்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவாகவோ அல்லது விந்தணுக்களின் தரம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
கருத்தரிப்பை ஊக்கப்படுத்தும் வழிகள்;
கருப்பையில் கரு தங்க மாதவிடாய் நேரத்தில் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது நல்ல பலனை தரும்.
மலை வேம்பாதி தைலம்;
இந்த தைலத்தை மாதவிடாய் காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். காலை வெறும் வயிற்றில் 20ml மலைவேம்பு தைலத்தை 50 ml சாதம் வடித்த தண்ணீர் அல்லது பழைய சாத தண்ணீரில் கலந்து அந்த ஐந்து நாட்கள் மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வரவும் .
இது மாதவிடாயை சற்று அதிகரிக்கும் ஆனால் கர்ப்பப்பையில் உள்ளபுண்கள் , அழுக்குகள் போன்றவற்றை நீக்கி சுத்தப்படுத்துகிறது. கருப்பையில் குழந்தை தங்க கருப்பையை தயார் படுத்துகிறது.
பச்சிலை மருந்து;
இலந்தை இலைகளை சிறிதளவு எடுத்து அதில் நான்கு மிளகு சிறிதளவு சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து மாதவிடாய் நாட்களில் மட்டும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டு வரவும். இது முற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு பச்சிலை மருந்து ஆகும். இதுவும் கருத்தரிப்பை ஊக்கப்படுத்துகிறது.
உணவு முறை;
கருவில் குழந்தை தங்க கருப்பை ஆரோக்கியம் மட்டும் முக்கியமில்லை நமது உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடல் எடை நம் உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும். துரித உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை இந்த காலகட்டத்தில் தவிர்க்க வேண்டும்.
ராகி;
ராகியை உங்கள் உணவில் பிரதான உணவாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ராகி பெண்களுக்கு அதிகம் பயன்படக்கூடியது .அதிக அளவு இரும்புச் சத்து மற்றும் கால்சியம் உள்ளது. அதனால் வாரத்திற்கு இரண்டு முறையாவது நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள்;
பழங்களில் உலர்ந்த அத்திப்பழம் நான்கு, பேரிச்சம்பழம் நான்கு மற்றும் செவ்வாழைப்பழம் இவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் .செவ்வாழைப்பழத்தை இரவில் கணவன் மனைவி என இரு பாலருமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
விதை உணவுகள்;
பாதாம் பருப்பு, வேர்க்கடலை, பூசணி விதை, சியா விதை போன்ற விதைகளை தினமும் ஏதேனும் ஒரு வழியில் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தைராய்டு ,ஹார்மோன் இம்பேலன்ஸ் இருப்பவர்கள் முதலில் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். ஆகவே இந்த வழிமுறைகளை மேற்கொண்டு அதிக செலவில்லாமல் உங்கள் கருத்தரிப்பை ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025