தம்மா துண்டு கடுகுல இவ்வளவு விஷயம் இருக்கா.? இது தெரியாம போச்சே.!

நம் அனைவரது சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருள் இந்த கடுகு தான். கடுகு இல்லாத சமையல் அறையே இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு கடுகு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுகை கொண்டு ஏன் தாளிக்கிறோம் மற்றும் அதன் பயன்கள் என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறியாதுன்னு சும்மாவா சொன்னாங்க.. அதனால்தான் இவ்வளவு ஆண்டு கடந்தும் இன்னும் நம் சமையலறையில் முக்கிய பொருளாக உள்ளது. இது காரம் மற்றும் கசப்பு இரண்டு சுவையும் சேர்த்தே கொண்டுள்ளது. கருங்கடுகு, செங்கடுகு, வெண்கடுகு, மஞ்சள் கடுகு என பல வகை கடுகுகள் இருந்தாலும் நம் சமையலில் பயன்படுத்துவது கருங்கடுகு தான்.
சாப்பிட்ட உடனே இதெல்லாம் பண்றீங்களா? இனிமே இந்த தப்பை பண்ணாதீங்க….
அமெரிக்கா போன்ற நாடுகளில் மஞ்சள் நிற கடுகு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கருங்கடுகில் தான் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது. ஒமேகா 3 (Omega 3) என்ற கொழுப்பு அமிலம் மீன் எண்ணெயில் அதிகம் காணப்படும் அதை அடுத்து காணப்படும் ஒரு முக்கிய பொருள் கடுகு தான்.
கடுகு எண்ணெய்
கடுக்கிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது இதயத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் இதய நோய் நம்மை நெருங்காமல் பாதுகாக்கும்.
வயிற்றுப் பூச்சிகளை அழிக்கக்கூடிய தன்மை இந்த கடுகுக்கு உள்ளது. அது மட்டுமல்லாமல் விஷ பூச்சிகள் தீண்டிய விஷத்தை முறிக்கும் தன்மையும் இந்த கடுகுக்கு உள்ளது.
எதற்காக கடுகு கொண்டு நாம் தாளிக்கின்றோம் தெரியுமா?
- சைனைடு இருக்கும் ஒரே பொருள் கடுகு தான். இந்த சைனைடு வேர் பகுதிகளில் தான் காணப்படுகிறது.
- நெற்பயிரை பயிரிட்ட பின் அதில் எலிகளின் சிறுநீரகம் மற்றும் பல விஷ பூச்சிகள் தீண்டல், பறவைகளின் எச்சம் போன்றவை நெற்பயிரின் தான் இருக்கும். எ
- ன்னதான் அதை நாம் பல முறைகளைக் கொண்டு சுத்திகரித்தாலும் அதன் விஷத்தன்மை எள்ளளவிலாது இருக்கும்.
- அதனால்தான் எந்த ஒரு குழம்பு வகை மற்றும் பொறியல்களை செய்யும் போது கடுகு தாளித்து விட்டால், அதில் உள்ள விஷத்தன்மையை அந்த சைனைடு அகற்றி விடும். இதனால்தான் நாம் தாளிக்கின்றோம். தாளிப்பது சுவைக்காக மட்டுமல்ல.
- மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கடுகை சேர்த்துக் கொண்டால் அந்த மருந்து வேலை செய்யாமல் போய்விடும்.
- இந்த கடுகில் பல கலப்படங்கள் வந்துவிட்டது. நாம் பார்த்து தான் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
கலப்படத்தை கண்டறியும் முறை
- கடுகில் ஆர்ஜிமோன் மற்றும் கேழ்வரகு போன்ற பொருட்களை கலப்படம் செய்கிறார்கள். இந்த ஆர்ஜிமோன் நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடிய ஒரு விதையாகும்.
- கடுகை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் அது கடுகு என்றால் கீழே தங்கிவிடும் அதில் உள்ள கலப்படம் மேலே மிதக்கும்.
- கடுகை உள்ளங்கையில் வைத்து நசுக்கினால் மஞ்சள் நிறத்தில் உட்புறத்தோல் வெளிப்படும். இதுவே வெள்ளை நிறத்தில் காணப்பட்டால் அது ஆர்ஜிமோன் விதை ஆகும்.
- ஆகவே கடுகுகளை நாம் வாங்கும் முன் நன்கு அறிந்து அதை வாங்கி பயன்படுத்த வேண்டும்.