உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை உள்ளதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
பொதுவாக இனிப்பு பொருட்கள் இருக்கும் இடத்தில் எறும்புகள் இருப்பது வழக்கம். அவ்வாறு நாம் நமது வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் கூட எறும்பு வருவதுண்டு. இந்த பிரச்சனை பல பெண்களுக்கு தொந்தரவாக இருக்கலாம். தற்போது இந்த பதிவில், எறும்பு தொல்லையில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.
சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தை எறும்புகள் வலம் வருவது வழக்கம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, சர்க்கரை இருக்கும் பாத்திரத்தில் நான்கு அல்லது ஐந்து கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்பு தொல்லை இருக்காது.
நம் சமையல் பொருட்களை வைப்பதற்கு அலமாரி போன்ற பொருட்களை பயன்படுத்துவது உண்டு. இவற்றிற்குள் எறும்புகளின் நடமாட்டத்தை தடுக்க, அதனுள் உலர்ந்த வெள்ளரிக்காயின் தோலை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
நாமத்து வீடுகளில் மூலை முடுக்குகளில் எறும்புகள் தங்களது வசிப்பிடமான புற்றுகளை அமைப்பது உண்டு. அவ்வாறு அமைத்திருந்தால், அந்த புற்றுகளின் மீது சிறிதளவு பெருங்காய தூளை தூவினால், எறும்புகள் மீண்டும் வராது.