காபி நல்லதா.? கெட்டதா.? உங்கள் சந்தேகத்திற்கான சரியான தீர்வு இதோ.!
குளிர்காலமோ கோடை காலமோ அட எந்த காலமாக இருந்தால் என்னங்க காபிக்கு என ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காபியில் பில்டர் காபி, டிகிரி காபி, இன்ஸ்டன்ட் காபி, பிளாக் காபி என பலவகை உள்ளது. நாம் இன்று இந்த பதிவில் பிளாக் காபி நல்லதா அதை யார் யார் எடுத்துக்கொள்ளக்கூடாது என இந்த பதிவில் பார்ப்போம்.
காபியை ருசிக்க பல காரணங்கள் உள்ளது நம்மில் பலருக்கு இயற்கையை ரசிக்க ஒரு கப் காபி போதும் காபி ருசித்து இயற்கையை ரசித்து அடடே! அதன் சுகமே தனி. காபிக்கு அடிமை ஆவதை விட அதன் வாசனைக்கே அடிமையானவர்கள் அதிகம்.
மழைக்கு ஒரு கப் காபி, படிக்க ஒரு கப் காபி, ட்ராவலுக்கு காபி, வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் காபி குடிக்கிறீங்களா என கேட்பது அந்த அளவுக்கு நம் கலாச்சாரத்தோடு காபி ஒன்றிணைந்துள்ளது.
பிளாக் காபியில் உள்ள நன்மைகள்:
பிளாக் காபியில் 0% கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காபியை பயன்படுத்தலாம். ப்ளாக் காபி கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள காஃபைன் நரம்பு மண்டலத்தை தூண்டி மூளையை சுறுசுறுப்பாகும்.
ஒரு நாளைக்கு இரண்டு கப் தினமும் எடுத்து வந்தால் கல்லீரல் பிரச்சனை, நரம்புத்தளர்ச்சி, சர்க்கரை நோய் போன்றவர்களுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. குறிப்பாக மன அழுத்தத்தை போக்கக்கூடிய அருமருந்தாகும். இதில் உள்ள குளோரோஜெனிக் ஆசிட் அதிகம் உள்ளதால் அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். மேலும் ஞாபக சக்தியை தூண்டும்.
பக்க விளைவுகள்:
காபியை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மை, படபடப்பு, தலைசுற்றல் போன்றவை ஏற்படும் மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபியை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது சிறுநீரகப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், செரிமான தொந்தரவு இருப்பவர்கள் அளவாக பயன்படுத்துவதே நல்லது.
ஒரு நாளைக்கு இரண்டு கப் வீதம் எடுத்துக் கொள்வது போதுமானதாகும், அதாவது 250 எம்எல் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே காபியை நாம் அளவோடு பயன்படுத்தி ஆனந்தம் அடைவோம்.