Aval recipe-அவலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. அவல் உடல் எடை குறைப்பில் முக்கிய உணவாகும் . இந்த பதிவில் அவலை வைத்து பர்பி செய்வது எப்படி என பார்ப்போம்.
அவல் மற்றும் ஏலக்காயை மிதமான தீயில் மொறுமொறுவென வறுத்து எடுக்கவும். பிறகு சூடு ஆறியதும் அதனை நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேர்க்கடலையும் தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 ஸ்பூன் நெய் ஊற்றி அதிலே துருவிய தேங்காயை அதன் ஈரத்தன்மை போகும்வரை வறுத்தெடுக்கவும் அப்போதுதான் அவல்பர்பி இரண்டு நாள் வரை கெடாமல் இருக்கும். மற்றொரு பாத்திரத்தில் முக்கால் கப் வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
வெல்லம் சேர்த்தால் அதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மிதமான தீயில் வைத்துக்கொண்டு அதிலே அரைத்து வைத்துள்ள அவல் மற்றும் தேங்காயை சேர்த்து கிளறவும் பிறகு வேர்க்கடலையும் சேர்த்து நன்கு கிளறவும், கிளறிய பிறகு தண்ணீர் பற்றவில்லை என்றால் லேசாக தெளித்துக் கொண்டு உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
ஒரு டப்பாவில் லேசாக நெய் தடவி நாம் செய்து வைத்து அவல் ரெசிபியை டப்பாவில் சேர்த்து வைத்துவிட்டு பத்து நிமிடம் கழித்து அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து சதுர வடிவில் கட் செய்து எடுத்தால் சுவையான அவல் பருப்பி ரெடி.
குழந்தைகளுக்கு நொறுக்கு தீனிகளை கொடுப்பதற்கு பதில் இதுபோல் வீட்டிலேயே செய்து வைத்துக் கொண்டு கொடுங்கள்.
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை…
திருப்பதி : ஏழுமலையான கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் தரிசனம் செய்வதற்கான…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…