காதல் சுகமானதா? சுமையானதா?
இன்றைய காதலர்களுக்கு காதல் சுகமானதா? சுமையானதா?
இந்த உலகமே இன்று காதலால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு உயிரினங்களும் ஒவ்வொன்றின் மீது காதல் வைத்திருக்கின்றனர். உலகமெங்கும் காதல் பரவிபோயிருக்கிறது. இன்றுவரை பல காதல் கதைகள், கவிதைகள், கதைகள், காவியங்கள் என உருவாகியுள்ளது
அன்று இந்த காதல் கோழையை வீரனாக்கி காட்டியது. ஏனென்றால் அன்றைய மன்னர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு வீரனை தான் மணம் முடித்து வைக்கின்றனர். இதுதான் அன்றைய காதலாக இருந்தது. ஆனால் இன்றைய காதல், காதலுக்கு கண்கள் இல்லை என்று கூறியவாறு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்த உலகம்.
அன்றைய புலவர்கள் காதலை புனிதமானதாக கருதினர். அதனால்தான் பாரதியார் ‘காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பம் முதலிய கலைகளுண்டாம் ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே‘ என்று பாடியுள்ளார். நமக்கு முன் தோன்றிய நமது முன்னோர்களின் காதல் அனைத்துமே, காதலை சுவையானதாகவும் சுகமானதாகவும் தான் எடுத்துக் காட்டியது. ஆனால் இன்று இந்த காதல் பலருக்கு, சுமையானதாக தான் காட்டுகிறது.
இன்று காதல் என்பது மனிதர்களுக்கு மட்டும் ஆனது மட்டுமல்ல. அனைத்து ஜீவராசிகளுக்கும் காதல் உணர்வுகள் உண்டு. பறவைகளும் விலங்குகளும் உற்று கவனித்தால் அவர்களுக்கு இடையேயான காதல் நமக்கு தெரியும். மனித சமூகத்தில் காதல் என்பது எத்தனையோ விஷயங்களை நிகழ்த்துகிறது.
ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கி விட்டால் அவனுடைய பேச்சில், நடை, உடை பாவனையில் மாற்றம் ஏற்படுகிறது. திறமைகளை வெளிப்படுத்துவது புதிய உற்சாகமும் உத்வேகமும் காதல்தான் மையப்புள்ளியாக இருக்கிறது. காதல் ஒரு உருவாக்கவும் செய்கிறது. அளிக்கவும் செய்கிறது. உருவாக்கப்பட்ட மனிதனுக்கு காதல் சுகமானது. அனால், உருகுலைக்கப்பட்ட மனிதனுக்கு காதல் சுமையானது. காதலர் தினம்