இந்த உணவுகளோடு இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா.?

Published by
K Palaniammal

சில உணவுகளை மற்ற உணவுகளோடு சேர்த்து சாப்பிடும் போது நம் உடலில் பல உபாதைகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.

பாலுடன் சேர்க்க கூடாத உணவுப் பொருள்கள்

  1. பாலுடன் மீனை சேர்த்து  சாப்பிட்டால் ரத்தம் அசுத்தம் ஆகிவிடும் .நம் உடலின் நுண்ணிய பாதைகள் அடைக்கப்படும், சீரான ரத்த ஓட்டம் பாதிப்படையும்.
  2. சிலர் பாலுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவார்கள் இதனால் சளி அதிகரிக்கும்.
  3. தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது ஏனெனில் அது வாயு தொல்லையை உண்டாக்கும்.
  4. பாலும் முட்டையும் அதிக புரோட்டின்  உள்ளது இதை ஒரே நேரத்தை எடுத்துக் கொள்ளும் போது செரிமான தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
  5. பொதுவாகவே கீரைகள் ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் .இதில் டானின் இருப்பதால் பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் பாதிக்கப்படும்.

தயிர்

தயிருடன் வருத்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவது பலருக்கு பிடித்தமான ஒன்று. உதாரணமாக உருளைக்கிழங்கு வருவல், மீன், கருவாடு போன்றவற்றை சேர்த்து சாப்பிடும் போது வெண்மேகம் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தேன்

தேனை சூடு படுத்தி எடுத்துக் கொண்டால் அதன் இயற்கையான சத்துக்கள் அழிக்கப்படுகிறது. தேனை நெய்யுடன் ஒன்றாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஒருவேளை அப்படி எடுத்துக் கொண்டால் தேவையில்லாத கழிவுகள் ஒன்றாகி பல உபாதைகளை ஏற்படுத்தும்.

பழங்கள்

  1. பழங்களை தனியாக சாப்பிடும் போது தான் நன்கு ஜீரணமாகும். அதுவே பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது செரிமான தொந்தரவை ஏற்படுத்தும்.
  2. பல சாலட்டுகளை சாப்பிடும் போது புளிப்பு மற்றும் இனிப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் பித்தம் மற்றும் கபதில்   மாற்றம் ஏற்படும்.
  3. பப்பாளி சாப்பிட்ட பின் தண்ணீர் அருந்தக்கூடாது.
  4. வாழைப்பழத்தை தயிர் மற்றும் மோருடன்  எடுத்துகொள்ள கூடாது .

அசைவம்

  1. அசைவ உணவுகளை பால் மற்றும் எள்ளுடன்  சேர்த்து சாப்பிடக்கூடாது.
  2. ஒரே நாளில் சிக்கனையும் பன்றி இறைச்சியையும் சேர்த்து எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் குடலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல்வேறு நச்சுக்களை ஏற்படுத்துகிறது.
  3. சமைத்த உணவுகளை சமைக்காத உணவுகளுடன் இணைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே இந்த பதிவின் மூலம் எந்த உணவுடன் எதை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து பயன்படுத்தி நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

33 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

39 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

56 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago