அடடே.! மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்தால் இவ்வளவு நன்மையா.?

நமது குடலில் தேங்கியுள்ள கழிவுகளை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு எந்த பொருளை பயன்படுத்தலாம் மற்றும் அன்றைய நாளில் கடைபிடிக்க வேண்டியவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
குடல் சுத்தம் செய்யும் முறையில் ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அது என்னவென்றால் தினமும் தான் நமது கழிவுகள் வெளியேறி கொண்டு தான் இருக்கிறது பிறகு ஏன் மாத்திரைகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இது மிகவும் தவறான கருத்து ஆகும்.
உதாரணமாக, நாம் தினமும் பயன்படுத்தும் பாத்திரம் கழுவும் சிங்க், பாத்ரூம் போன்றவற்றில் தண்ணீர் போய்க் கொண்டே தான் இருக்கிறது. பிறகு எதற்காக மருந்து மற்றும் டாய்லெட் கிளீனர் பயன்படுத்தி சுத்தம் செய்கிறோம். அதுபோல்தான் நம் அன்றாடம் மலம் கழித்தாலும் குறிப்பிட்ட அளவு நம் மலக்குடலிலேயே ஒட்டி இருக்கும்.
இந்த உணவுகளோடு இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா.?
அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது பேதி மருந்துகள் மற்றும் இயற்கை முறைகளை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
குடலை சுத்தம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
பசியின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வாகும், நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தும், வயிறு உப்பியது போன்ற நிலை உள்ளவர்களுக்கு நல்ல நிவாரணையாக இருக்கும் .
தோல் வியாதி
தோல் வியாதிகளுக்கு முக்கிய காரணம் நாம் உண்ணக்கூடிய உணவுகளில் உள்ள நச்சுக்களை காரணமாகிறது. எனவே குடலை சுத்தம் செய்வதன் மூலம் தேவையற்ற நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் முகப்பரு ,அலர்ஜி பிரச்சனைகள் குறைக்கப்படுகிறது.
ஹார்மோனல் இம்பேலன்ஸ்
ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடல் சுத்தம் செய்வது அவசியமானது.
குடல் சுத்தம் செய்ய தேவையான மருந்துகள்
- நிலவரை பொடி 5 முதல் 10 கிராம் அளவை ஒரு ஸ்பூன் சுடு தண்ணீரில் இரவு உணவுக்குப் பின் தூங்க செல்வதற்கு முன் கலந்து குடிக்கவேண்டும். மறுநாள் உடலில் தேங்கியுள்ள அழுக்குகள் கழிவுகள் சுத்தமாகிவிடும்.
- இதே போல் பொன்னாவரை, திரிபலா, பொடிகளையும் பயன்படுத்தலாம். வயதிற்கு ஏற்ப அளவுகள் மாறுபடும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் இந்த முறைகளை பயன்படுத்தலாம்.
- அதுபோக பேதி மாத்திரைகளை உபயோகித்தும் உடல் கழிவுகளை அகற்றலாம்.
- போதிய வரை இயற்கை மருந்துகளை உபயோகிப்பதை சிறந்தது. ஏனெனில் இயற்கை மருந்துகளை உபயோகிக்கும் போது தானாகவே நின்றுவிடும்.
- பேதி மாத்திரைகளை உபயோகிக்கும் போது அதை நிறுத்தவும் ஒரு மாத்திரை போட வேண்டும்.
குறிப்பு
இவற்றை உபயோகித்து மறுநாளும் பேதி ஏற்பட்டால் பொட்டுக்கடலை சாப்பிட்டு வரலாம் அல்லது லெமன் சாரில் உப்பு போட்டு குடித்து வந்தால் உடனே நிற்கும்.
அன்றைய நாளில் கடைபிடிக்க வேண்டியவை
பேதி மருந்துகளை சாப்பிடுவதற்கு மூன்று நாள் முன்பில் இருந்தே சைவ உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ளவும், நெய் மற்றும் எண்ணெய் பசை உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி நீர் உணவுகள், பழச்சாறு போன்றவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
எண்ணெயில் பொரித்து எடுத்த உணவுகள் மற்றும் காரம் நிறைந்த உணவுகள், அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஆகவே இந்த முறைகளை பயன்படுத்தி ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நம் குடலை சுத்தம் செய்து நம் உடல் நலத்தை பாதுகாப்போம் நலமே நம் உடல் ஆரோக்கியம்.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025