லிக்விட் கொசு விரட்டிகளை பயன்படுத்துவது நல்லதா.? கெட்டதா.? உங்கள் சந்தேகத்திற்கான தீர்வு.!
கொசுக்களின் தொந்தரவால் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் கொசுக்களின் தொல்லையில் இருந்து தப்பிக்க கொசு பத்தி, கொசு வலை கொசு மேட், லிக்விட் வகைகள் போன்றவைகளை பயன்படுத்துவோம். அந்த வகையில் ரசாயனம் கலந்த லிக்யூடை பயன்படுத்துவதில் நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.
பொதுவாக லிக்விட் கொசு விரட்டிகள் சூடாக்கும் போது உள்ளே இருக்கும் திரவத்தோடு, கார்பன் கலந்து ஆவியாகி கொசுக்களை செயலிழக்கச் செய்யும். இந்த முறையில் தான் லிக்யூட் வகைகள் செயல்படுகிறது. அது கொசுக்களை அழிக்கும் போது குழந்தைகளை பாதிக்குமா என்ற சந்தேகம் வருவது வரவேற்கத்தக்கது தான்.
செண்ட் அடிக்காமலே உங்க உடம்பு மண மணக்க இதோ சூப்பரான டிப்ஸ்..
பைரித்திராய்டு காம்பௌன்ட்ஸ் என்ற இயற்கை பூச்சி விரட்டி சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகையான பூக்களிடம் இருந்து இயற்கையாகவே இந்த பைரிதிராய்டு திரவம் சுரக்கும். அதை எடுத்து தான் மாடிஃபைடு செய்து பயன்பாட்டிற்கு வருகிறது.
இது எப்படி வேலை செய்யும் என்றால் உடலின் நரம்பின் வழியாக பரவி தசைகளை தூண்டச் செய்யும் இதனால் உடலை செயலிழக்க செய்கிறது. இது பாலூட்டி இனத்தில் வேலை செய்வதில்லை. அதாவது மனிதன், ஆடு, மாடு போன்றவற்றிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது கொசுக்கள் பூச்சிகள் போன்றவற்றை மட்டுமே செயலிழக்கச் செய்யும் என்று பலவித ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.
மேலும் கேன்சர் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது. ஆனால் இது ஒரு சிலருக்கு இதன் வாசனை தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் தொண்டை கரகரப்பு போன்றவற்றை ஏற்படுத்தும் இதனால் பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் இதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே அறைகளை மூடிவிட்டு இந்த லிக்யூடை அரை மணி நேரம் ஆன் செய்து வைத்து விட வேண்டும்.
அடிக்கடி முகத்திற்கு வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..
அரைமணி நேரம் கழித்து அறைகளை திறந்தால் கொசுக்கள் உள்ளே வருவதை தடுக்கலாம். மேலும் நீங்கள் தூங்க செல்வதற்கு முன்பே அதன் வாசனையும் போய்விடும். இப்படி செய்தால் அதனால் எந்த ஒரு அலர்ஜியும் நமக்கு ஏற்படாது. இந்த லிக்விடை பயன்படுத்துவதில் தொந்தரவு இருந்தால் இந்த முறைகளை பின்பற்றலாம் அல்லது தவிர்க்கலாம்.
அதற்குப் பதிலாக இயற்கை கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம். வேப்ப இலைகளை மாலை நேரத்தில் அறைகளை மூடிவிட்டு புகை போடுவதன் மூலம் கொசுக்களை விரட்டியடிக்கலாம்.