குளிப்பதற்கு சிறந்தது சுடுதண்ணீரா? பச்ச தண்ணீரா? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

தினமும் சுடு தண்ணீரில் குளிப்பது நல்லதா அல்லது பச்சை தண்ணீரில் குளிப்பது நல்லதா என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

குளிப்பது என்பது நம் உடலில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்காக மட்டுமல்ல உடல் சூட்டை குறைப்பதற்காகவும் தான் . குளிப்பதற்கு சுடு தண்ணீர் மற்றும் பச்சை தண்ணீரை பயன்படுத்துவோம். இவற்றின் நன்மைகளை இங்கே அறிந்து கொள்வோம்.

பச்சை தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்;

காலையில் எழுந்ததும் பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது நரம்பு மண்டலம் தூண்டப்படுகிறது. அதனால் அன்றைய நாள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். மேலும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனை குறைத்து மன அழுத்தத்தையும் குறைக்கிறது.அதனால் டிப்ரஷன் உள்ளவர்கள் பச்சை தண்ணீரில் குளிக்கும்போது மூன்று மாதங்களில் மன அழுத்தம் குறையும் என ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. சொரியாசிஸ் போன்ற தோல் நோய் உள்ளவர்கள் சுடு தண்ணீரை தவிர்த்து பச்சைத் தண்ணீரில் குளித்தால் அதன் தாக்கம் குறைக்கப்படுகிறது.

சுடு தண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்;

சுடு தண்ணீரில் குளிக்கும் போது தசைகள்  தளர்வடைகிறது. உடல் அசதி நீங்கும், மேலும் உடல் வலியும் குறையும். அது மட்டுமல்லாமல் மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. இது தூக்கத்திற்கு மிக அவசியமான ஹார்மோன் ஆகும். அதனால் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சுடுதண்ணீரில் குளித்து விட்டு தூங்கவும்.

சுடு தண்ணீர் குளிக்கும்  போது சருமத்தில்  உள்ள அழுக்குகள் மற்றும் வியர்வை  நாளங்களுக்கு ஹீலிங்காக இருக்கும். சளி தொந்தரவு ,தலைவலி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் சுடு தண்ணீரில் குளிக்கும் போது ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் .இதனால் விரைவில் குணமாகிறது.

ஆனால் ஒரு சிலர் ஆவி பறக்க கூடிய சுடு தண்ணீரில் குளிப்பார்கள்  அவ்வாறு குளிக்க கூடாது மிதமான வெதுவெதுப்பான சுடு தண்ணீரில் குளிப்பது தான் நல்லது. குழந்தை பேறுக்கு  முயற்சி செய்யும் தம்பதிகள் சுடுதண்ணீரில் குளிப்பதை தவிர்க்கவும் .ஏனெனில் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. குறிப்பாக மாலை நேரங்களில் சுடு தண்ணீரில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளவும்.

ஆகவே அன்றைய நாள் புத்துணர்ச்சியாக இருக்க காலையில் பச்சைத்தண்ணீர் குளியலும், உடல் அசதி நீங்கி நல்ல தூக்கம் வர மாலையில் சுடு தண்ணீரில் குளிப்பது சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்